Indian 2: பிரமோஷனுக்கு ரெடியாகும் இந்தியன் 2 டீம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2, இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஷூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. படமும் முடங்கியது. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தை தூசி தட்டி சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் நீளம் கருதி படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்று வந்த சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சூட்டிங் இடையிலேயே நிறுத்தப்பட்டது. படமும் முடங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் தூசி தட்டப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் ரிலீஸ்: இந்நிலையில் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம் ரிலீசாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள சூழலில் படத்தின் ப்ரோமோஷன்களை தற்போது படக்குழுவினர் துவங்க உள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் நடித்துள்ள சூழலில் ஊழலுக்கு எதிரான இந்தியன் தாத்தாவாக முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் அவர் தோன்றவுள்ளார்.
விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதில் தாத்தா வராரு என்ற லிரிக் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான சேனாபதி வரைபடங்களை வைத்து எடுக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் பாடல் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரைவில் தெரியவரும். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் சேனாபதி கேரக்டருக்காக தினந்தோறும் 6 மணிநேரம் மேக்கப்பிற்காக நேரம் செலவழித்துள்ளார் கமல்ஹாசன்.
மாஸ் காட்டுவாரா அனிருத்?: முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். சுதந்திர போராட்ட தியாகியாக இந்தப் படத்தில் நடித்திருந்த சேனாபதி கேரக்டரே லஞ்சத்திற்கு எதிராக செயல்படுவதாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனே லஞ்சம் பெற்றதாக தெரியவரும் சூழலில் மகன் என்றும் பாராமல் அவரை கொல்வார் சேனாபதி. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஒரே கெட்டப்பில்தான் நடித்துள்ளார். அதனால் இந்தப் படம் எப்படிப்பட்ட கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் அவரது முந்தைய படங்களைப் போலவே இந்த படமும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஆல்பமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்,


Click it and Unblock the Notifications











