Indian 2 movie: இன்று மாலை வெளியாகும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்.. அதுவா இருக்குமோ?

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்தப் படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தில் முதல் பாகத்தைப் போலவே சேனாபதி என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்துள்ளார். அவரது கெட்டப் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் சமீபத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக இயக்குனர் சங்கர் மற்றும் லைகா நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது படத்தின் ரிலீஸ் அப்டேட்டாக இருக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தில் ஊழலுக்கு எதிரான அப்பா மற்றும் ஊழலில் தோய்ந்த மகன் என இருவேறு கெட்டப்புகளில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் சேனாபதி கேரக்டரில் மட்டுமே அவர் நடித்துள்ளதாக தெரிகிறது.

Actor Kamal haasan s Indian 2 movie update released today evening

இந்தியன் படம்: நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. முன்னதாக இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கேரக்டர்களில் நடித்திருந்தார் கமல்ஹாசன். அப்பா சேனாபதி கேரக்டர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. சந்துரு என மகன் கேரக்டரிலும் கமல் நடித்திருந்தார். இது எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் காணப்படும் இளைஞனின் கேரக்டரை வெளிப்படுத்தும்வகையில் அமைந்திருந்தது.

ரிலீசுக்கு தயாரான இந்தியன் 2: அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா மற்றும் அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யா மகளாக கஸ்தூரி, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர். தற்போது பல ஆண்டுகளைக் கடந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. படத்தின் சூட்டிங் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட சூழலில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படம் முடங்கியது. தற்போது படத்தை மீண்டும் தூசித்தட்டி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இன்று மாலை இந்தியன் 2 அப்டேட்: படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், நாடாளுமன்ற தேர்தலையடுத்தே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் ஷங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியான சூழலில் இந்த அப்டேட் படத்தின் ரிலீஸ் குறித்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் நாட்டிற்கு கேன்சர் போன்றது என்றும் ஊழல் கொல்லும் என்றும் இந்த அறிவிப்புடன் வெளியான போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் அப்டேட்?: படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. இதனிடையே, இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தின் சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து இந்த ஆணடிலேயே இந்தப் படத்தின் இரு பாகங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய மிகப்பெரிய வெற்றி மற்றும் வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X