Indian 2 movie: இந்தியன் 2 படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்.. We All waiting.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன். காஜல் அகர்வால். ரகுல் பிரீத் சிங். சித்தார்த். பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாத ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான அளவில் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கவுள்ள சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் மே மாதம் 29ம் தேதி மாலை வெளியாக உள்ளதாக பட குழுவினர் இன்றைய தினம் அறிவித்துள்ளனர். முதல் பாடல் அதிரடியாக வெளியான சூழலில் இரண்டாவது பாடல் ரொமான்டிக்காக உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Actor Kamal haasan s Indian 2 team announced about 2nd single release update

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட சூழலில் இடையில் சில விஷயங்களால் இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டில் மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் குறிப்பிடப்படவில்லை. இதனிடையே படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீடு விழா: சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் தற்போது இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 29ம் தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாடல் அதிரடி சரவெடியாக வெளியான சூழலில் தற்போது இந்த இரண்டாவது பாடல் சித்தார்த் மற்றும் ரகுல் பிரீத் சிங் இணைந்துள்ள ரொமான்ஸ் பாடலாக வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வது சிங்கிள் அப்டேட்: இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துள்ளனர். படத்தில் ஸ்டைலிஷ்ஷான சித்தார்த்தை பார்க்க முடிகிறது. அவரது போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக சித்தார்த் நடிப்பில் சித்தா படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் சித்தார்த் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் ஸ்டைலிஷ்ஷாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள்: படத்தில் காஜல் அகர்வால் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் ஊழலுக்கு எதிரானதாக உருவாகியுள்ள சூழலில் படம், கடந்த 1996ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தைப் போலவே மிகப் பிரமாண்டமான வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கலாம். படம் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் ஜூன் மாதம் 1ம் தேதியே படத்தின் இசை வெளியீடு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து அடுத்த ஒரு மாதத்திற்கு இந்தப் படத்தின் பிரமோஷன்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X