ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. அடேங்கப்பா இவ்வளவு கெட்டப்பா.. மிரட்டும் இந்தியன் 2 ட்ரெயிலர்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த். ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு இம்மாதம் துவக்கத்தில் நடந்த நிலையில் முன்னதாக வெளியான டீசரும் படத்திற்கான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்றியிருந்தது.

இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 29 ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு வேறு பாகங்களில் இணைந்து ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறது. முன்னதாக தற்போது படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மிரட்டியுள்ளது. அடேங்கப்பா இத்தனை கெட்டப்பா, இந்த வயசுல பிரிச்சி மேய்ஞ்சிருக்காரே என்று கமல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Kamal haasan Indian 2 movie Shankar tamil cinema 2

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்ததை தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் வேலைகளை அவர் துவங்கினார்/ கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சில வாரங்கள் எடுக்கப்பட்டு தொடர்ந்து சூட்டிங்கில் நடந்த விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் படம் முடங்கியது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி இணைந்துள்ளது. மேலும் விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து அனிருத் இந்த படத்தில் கமல்ஹாசன் கூட்டணியில் இணைந்துள்ளார்.

இந்தியன் 2 ட்ரெயிலர்: படத்தின் சூட்டிங் இந்தியாவின் ஐதராபாத், சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் பாங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடத்தப்பட்ட நிலையில் படம் ரிலீசுக்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இம்மாதம் துவக்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு நடந்தநிலையில் முன்னதாக டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. அடேங்கப்பா இத்தனை கெட்டப்புகளில் கமல்ஹாசன் நடிச்சிருக்கிறாரா என்ற வியப்பும் அதிர்ச்சி கலந்த சந்தோஷமும் இன்றைய தினம் ரசிகர்களை தூங்க விடாது என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியன் 3 படம்: படத்தில் கமலுடன் ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்தில் சித்தார்த்திற்கும் மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதை இந்த ட்ரெயிலர் மூலம் அறிய முடிகிறது. இந்த படத்தின் அடுத்த பாகம் இந்தியன் 3யின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இந்த படம் ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் அதில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 2வது பாகத்தில் அவர் இல்லை என்பதை முன்னதாகவே ஷங்கர் வெளிப்படுத்திவிட்டார்.

Kamal haasan Indian 2 movie Shankar tamil cinema 2

ரசிகர்களை கவரும் வசனங்கள்: இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் மிகப் பெரிய அளவில் காணப்படுகிறது. கமல்ஹாசன் இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாக வந்து ஊழலுக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை மிகச் சிறப்பாக அமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரில் காந்திய வழியில் நீங்கள், நேதாஜி வழியில் நான் மற்றும் இது இரண்டாவது சுதந்திர போர் போன்ற வசனங்கள் படத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் தன்னுடைய உழைப்பை அவர் மேற்கொண்டதாக இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்: தன்னுடைய கேரக்டருக்காக மெனக்கெடுவது எப்போதுமே கமலுக்கு கைவந்த கலை, அதிலும் இந்த படத்தின் மேக்கப்பிற்காக அவர் தினந்தோறும் 6 மணி நேரங்களை செலவிட்டதாக முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியன் படத்தைப் போல மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விக்ரம் படத்தை போல இண்டஸ்ட்ரியல் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து விஷயங்களும் படத்தில் இருக்கிறது என்று படக்குழுவினர் உற்சாகமாக தற்போது ட்ரெயிலரை வெளியிட்டு ரசிகர்களையும் படத்திற்காக காத்திருக்க வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X