Indian re-release: வெளியானது இந்தியன் படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெயிலர்.. உலகநாயகன் மிரட்டுறாரே!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, கஸ்தூரி, கவுண்டமணி என முன்னணி நடிகர்கள் நடித்து கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது இந்தியன் படம். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஷங்கருக்கேயுரிய ஸ்டைலில் வெளியான இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்தியன் படத்தை ஏஎம் ரத்தினம் தயாரித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. வரும் ஜூன் மாதம் 7ம் தேதி இந்தியன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-ரிலீசாகவுள்ளதாக தயாரிப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த ட்ரெயிலரையும் இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படங்களில் இந்தியன் 2 வரும் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக இந்தியன் 3 திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன்களை பிரம்மாண்டமான அளவில் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின்போதும் கமல் மற்றும் ஷங்கர் இருவரும் பங்கேற்று படம் குறித்த பல சுவாரசியங்களை பகிர்ந்திருந்தனர்.
இந்தியன் 2 படம்: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் வரும் 29ம் தேதி படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினர் தற்போது தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்தியன் படத்தின் ரீ-ரிலீஸ்: ந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் பிரமோஷனை கொடுக்கும் வகையில் தற்போது இந்தியன் படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, வரும் மே மாதம் 7ம் தேதி இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இது குறித்து நேற்றைய தினம் படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் படத்தின் ட்ரெயிலர் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது.
அதிரடி ட்ரெயிலர்: யார் என்று தொலைபேசி மூலம் கேட்பதும் இந்தியன் என்று கமல்ஹாசன் மிரட்டலாக பேசுவதும் என இந்த படத்தின் ட்ரெயிலர் பழைய நினைவுகளை தூண்டியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டில் இந்த படம் வெளியான நிலையில் அந்த காலகட்டத்திலேயே மிரட்டலான வகையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்தே கடந்த 2018ம் ஆண்டில் இந்த படத்தின் இரண்டாவது பாகம்த்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல காரணங்களால் இரண்டாவது பாகம் இடையிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு, தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் இந்தியன் படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்த பல வெற்றி படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் இந்தியன் படமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











