Indian re-release: ரீ-ரிலீசுக்கு தயாராகும் இந்தியன் படம்.. நாளை வெளியாகும் ட்ரெயிலர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்த படம் வரும் ஜூலை மாதம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள சூழலில் முன்னதாக வரும் ஜூன் மாதம் இந்தியன் படம் ரீ ரிலீசாக உள்ளது.
இந்தியன் படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-ரிலீசாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்தப் படம் ஓடிடியில் காண கிடைத்தாலும் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்கும் அனுபவத்தை பெற ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகம் காட்டுகின்றனர்.

இந்தியன் படம்: நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுபவர்/ இவரது பல படங்கள் தற்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகி வருகின்றன. அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் கமல்ஹாசன் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர்.
இந்தியன் 2 ரிலீஸ்: இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ஜூலை மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி என பல நடிகர்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் ஒன்றாம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 2 இசை வெளியீடு: இந்த விழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. லைகா மிகுந்த பொருட்செலவில் இந்தியன் 2 படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக உருவாகியுள்ளன. இதில் இந்தியன் 2 வரும் ஜூலை மாதம் வெளியாகியுள்ள சூழலில் இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு முன்னதாக இந்தியன் படத்தின் ரிலீஸ் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளதாக இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ரீ-ரிலீஸ்: தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் வெளியாக உள்ள சூழலில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பல படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த படங்கள் வெளியான காலகட்டத்தில் தற்போதைய தலைமுறையினர் பிறந்துகூட இருக்க மாட்டார்கள். அதனால் இந்த படங்களை திரையரங்குகளில் எக்ஸ்பீரியன்ஸ் செய்ய அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படங்கள் ஓடிடியில் காண கிடைத்தாலும் திரையரங்குகளில் இந்த படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











