KH233: ராணுவ கதைக்களத்தில் உருவாகும் கமலின் KH233.. இதனாலத்தான் சூட்டிங் பிராக்டீஸ் செய்தாரா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

தற்போது கல்கி படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிவரும் நிலையில், சமீபத்தில் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும்படியான வீடியோ வெளியாகி மாஸ் காட்டியது.

Actor Kamal haasans KH233 movie is said to be on the Military backdrop

ராணுவ கதைக்களத்தில் உருவாகும் கமலின் KH233 படம்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த இன்டஸ்ட்ரியல் ஹிட் காரணமாக மிகவும் உற்சாகமடைந்துள்ளார் உலகநாயகன். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகச்சிறப்பான பயணத்தை முன்னெடுத்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவரது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக பிரபாசின் கல்கி 2898 AD படத்தில் வில்லனாகவும் களமிறங்கியுள்ளார் கமல்.

இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பில் கமல் நடிக்கவுள்ள KH233 படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில், படம் விவசாய சம்பந்தமாக கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக அஜித்தின் அதிரடி ஆக்ஷன் கதைகளை இயக்கியுள்ள ஹெச் வினோத் இந்த கதைக்களத்தில் படமியக்கவுள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் படம் ராணுவ கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இதையொட்டியே சமீபத்தில் படக்குழு வெளியிட்ட வீடியோவில் கமல்ஹாசன் விதவிதமான துப்பாக்கிகளை சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். விவசாய கதைக்களத்தில் எதற்கு துப்பாக்கி சுடும் பயிற்சி என்று இந்த வீடியோ வெளியானபோது ரசிகர்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டு பான் இந்தியா ஸ்டார்கள் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் விஜய் சேதுபதி ஒருவர் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் யார் என்பது குறித்து விரைவில் தெரியவரும். இந்நிலையில் KH233 படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் கமலின் இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள் வெளியாகவுள்ள நிலையில், KH233 படமும் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கமல் நடிப்பு, தயாரிப்பு மற்றும் அரசியலில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். இந்த சூழலிலும் KH233 படத்தின் கதையை அவர்தான் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவரது தயாரிப்பில் தற்போது SK21 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிம்புவின் படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கவுள்ளது. சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்காகவே செலவழிப்பவர் கமல் என்ற விமர்சனம் அவர்மீது எப்போதும் உண்டு. அந்த வகையில் அவரது அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்திலும் கமல் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X