Kamal haasan: KH233 படத்திற்காக உலகநாயகனின் ட்ரெயினிங்.. அதிரடி சரவெடியா இருக்கே!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர். சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாக தொடர்ந்து மாஸ் காட்டி வருபவர்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன் கல்கி படத்திலும் வில்லனாக கமிட்டாகி மல்லுக்கட்டி வருகிறார்.

அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Kamal haasans KH233 movie training video for shooting released

KH233 படத்திற்காக துப்பாக்கி ட்ரெயினிங் எடுத்த உலகநாயகன்: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த இந்தப் படம் மேலும் பிரம்மாண்டமாக தற்போது இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியன் 2 படத்தை அடுத்து பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் கல்கி 2898 AD படத்திலும் வில்லனாக கமிட்டாகி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்திற்காக சில தினங்களே அவர் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களுக்கு முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படமும் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படம் குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2, கல்கி படங்களை தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங்கில் கமல் இணையவுள்ளார். கமல்ஹாசனின் தயாரிப்பில் படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்தை மையமாக கொண்டு கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் கதையை கமல்ஹாசன் எழுதியுள்ளார். பல சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை சூட்டிங்ற்கு முன்னதாகவே 125 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இணையவுள்ள நிலையில், படத்தின் முன் தயாரிப்புப் பணிகளை மிகவும் விறுவிறுப்பாக படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு ஹெச் வினோத்தின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். மேலும் வினோத்தின் சாதனைகளை பேசும் வீடியோவும் பகிரப்பட்டிருந்தது. அக்டோபரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ள வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில் கைத்துப்பாக்கிகள், மெஷின் கன்கள் உள்ளிட்டவற்றை கொண்டு இலக்கை நோக்கி சுடும் பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொள்வதாக காணப்படுகிறது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கவுள்ள நிலையில், அதன் ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இந்த வீடியோவில் கமல்ஹாசன் புகுந்து விளையாடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X