KH234 movie: கமல் பட டீசருக்காக ஜார்ஜியாவிலிருந்து வந்த ஸ்டண்ட் கலைஞர்.. சூப்பர்ல!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் அடுத்தடுத்த படங்களின் சூட்டிங் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டில் மட்டுமே இவரது 3 படங்கள் ரிலீசாகவுள்ளன.

Actor Kamal haasans KH234 movie title teaser shooting happening in chennai

கடந்த ஆண்டில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு சிறப்பாக கைக்கொடுத்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.

இந்தப்படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், அடுத்தடுத்து கல்கி, ஹெச் வினோத் படம், மணிரத்னம் படம் என கமிட்டாகியுள்ளார்.

கமல்ஹாசனின் விக்ரம் படம்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்தனர். இந்தப் படத்தின்மூலம் தாத்தாவாகவே நடித்திருந்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் வெற்றி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கமலுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

இந்தியன் 2 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தையும் தூசி தட்டினார் கமல்ஹாசன். தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு, டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசுக்கு வில்லனாக கல்கி 2898 AD படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மணிரத்னம் -கமல் கூட்டணி: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி இணையவுள்ளது. மேலும் படத்தில் த்ரிஷா, நயன்தாரா, ஜெயம்ரவி, துல்கர் சல்மான் போன்றவர்களும் இணையவுள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளது.

Actor Kamal haasans KH234 movie title teaser shooting happening in chennai

டைட்டில் டீசர் சூட்டிங்: இதற்கான சூட்டிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு நாட்கள் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாளைக்கான சூட்டிங்கில் கமலின் டூப்பாக ஜார்ஜியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்டண்ட் நடிகர் நடித்துள்ளார். அன்பறிவின் ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் பிரதானமாக அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டீசரில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Actor Kamal haasans KH234 movie title teaser shooting happening in chennai

இரண்டு கேமிராமேன்கள்: இந்த டீசர் காட்சிகளை இரண்டு கேமிராமேன்கள் படமாக்கியுள்ளனர். படத்தின் கேமிராமேன் ரவி கே சந்திரன் ஒருவர். மற்றொருவர் இந்திப்படங்களில் முன்னணி கேமிராமேனாக பணிபுரியும் மனுஷ்நந்தன். மொத்தத்தில் இந்த டீசர் விஷுவல் ட்ரீட்டாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இருவருமே அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்துவரும் நிலையில், இந்தப் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X