Indian 2: குஜராத்தி மொழியில் கமல் பேசிய நீளமான டயலாக்.. இந்தியன் 2 படத்தில் ட்விஸ்ட் வைத்த ஷங்கர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் தற்போது 28 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது பாகம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இந்தியன் 2 படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் பல கெட்டப்புகளில் கமல்ஹாசனை பார்க்க முடிந்தது. முன்னதாக வெளியான படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. படத்தின் பாடல்களும் அனிருத் இசையில் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரீ புக்கிங் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியுள்ளது.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச் சிறப்பாக ஈடுபட்டனர். ஏறக்குறைய 28 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் 2வது பாகம் ரிலீசாக உள்ளது. கடந்த மாதத்திலேயே இந்தியன் 2 படம் ரிலீசாக திட்டமிடப்பட்ட நிலையில் பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் இந்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிகமாக மெனக்கெட்ட கமல்: இந்தியன் 2 படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது 2வது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக இயக்குனர் சங்கருக்கேயுரிய ஸ்டைலில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காக மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமான செட்களை போட்டு சங்கர் படமாக்கியுள்ளார். இந்த படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியது. இதில் பல்வேறு கெட்டப்புகளில் கமல்ஹாசனை பார்க்க முடிந்தது. இது மட்டுமில்லாமல் படத்திற்காக அவர் மிகப் பெரிய அளவில் பல விஷயங்களுக்காக மெனக்கெட்டது தெரிய வந்துள்ளது.
குஜராத்தி மொழியில் நீளமான டயலாக்: முக்கியமாக இந்த படத்தின் மேக்கப்பிற்காக தினந்தோறும் 6 மணி நேரங்கள் அவர் செலவிட்டதாகவும் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் படக்குழு சார்பில் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் குஜராத்தி மொழியில் நீண்ட நெடிய வசனம் ஒன்றை கமல்ஹாசன் பேசியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு குஜராத்தி மொழி தெரியாத நிலையில், சூட்டிங்கிற்கு முந்தைய தினம் குஜராத்தி மொழி தெரிந்த ஒருவரிடம் இதற்காக பயிற்சி பெற்ற கமல்ஹாசன், அந்த டயலாக்கை ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்ததாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகப்பெரிய உற்சாகமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பாரா டப்பிங்கை பயன்படுத்திய ஷங்கர்: ஆனாலும் இந்த காட்சி தமிழ் ரசிகர்களை அதிகமாக கவறாது என்பதால் இயக்குனர் ஷங்கர் இதற்காக பாரா டப்பிங்கை அந்தக் காட்சியில் பயன்படுத்தியுள்ளார். அதாவது ஒரு டயலாக் மீது மற்றொரு டயலாக்கை தமிழ் மொழியில் வைப்பதாக இந்தக் காட்சியை ஷங்கர் உருவாக்கியுள்ளார். தமிழில் மட்டுமே பாரா டப்பிங்கை ஷங்கர் பயன்படுத்தியுள்ளதாகவும் மற்ற மொழிகளில் குஜராத்தி மொழியிலேயே கமல் பேசுவதாகவும் இந்தக் காட்சி அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











