பஞ்ச தந்திரம் கெட்டப்பில் மாஸ் காட்டும் கமல்ஹாசன்.. எந்தப் படத்திற்காக இந்த லுக்?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் தன்னை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இணைத்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களுக்காக பாடல்களையும் பாடி அசத்துகிறார். தன்னுடைய தயாரிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள அமரன் படத்தின் பிரமோஷன்களிலும் இவரை பார்க்க முடிகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த இந்தியன் 2 படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் கமல்ஹாசன். படம் விரைவில் தனது ரிலீசை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal haasan thug life movie rkfi

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகச்சிறப்பாக இணைந்து வருகிறார். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் மார்கெட் வேல்யூ மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ஷங்கர்இயக்கத்தில் வெளியான கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் அமைந்து வருகின்றன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவை சமீபத்தில் வீடியோ மூலம் படக்குழுவினர் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.

கமலின் புதிய லுக்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் KH237 படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கமல்ஹாசனின் புதிய லுக்கை அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மேலும் புதிய லுக்கில் புதிய பயணம் என்றும் பயணம் ஆரம்பம் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளது. இந்த புதிய லுக்கில் முன்னதாக வெளியான பஞ்ச தந்திரம் கெட்டப்பில் கமல்ஹாசன் காணப்படுகிறார்.

அமரன் பட பிரமோஷன்கள்: அடுத்ததாக கமல், அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தாலும் அந்தப் படத்தின் துவக்கத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், இடையில் புதிய படத்தில் கமல் இணையவுள்ளாரா அல்லது தக் லைஃப் படத்தின் பேட்ச் வேலைகளுக்கான லுக்கா என்பது குறித்து ராஜ்கமல் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் கமல்ஹாசன் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து வருகிறார். ராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கையை சொல்லும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அமரன் பிரமோஷனில் கமல்ஹாசன்: இந்தப்படத்தின் பிரமோஷன்களுக்காக நிஜ ராணுவ வீரர்களின் வாழ்க்கையில் நடந்த பல சாகசங்கள், இழப்புகள் உள்ளிட்டவை வீடியோக்களாக அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் இந்தப் படத்திற்கான அதிகப்பட்ச எதிர்பார்ப்புகளை கொடுத்து வருகின்றனர். நம் நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லைகளில் கடினமாக செயல்படும் இத்தகைய வீரர்களை நம் கண்முன்னால் அமரன் டீம் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மூலம் கொண்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X