Actor Kamal haasan: இனிமேல் தெல்லுலு புது சொல்லுலு-வா.. ரசிகர்களை குழப்பிய கமல்ஹாசன்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த இன்டஸ்ட்ரியல் ஹிட் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயங்க வைத்து வருகிறது. தற்போது அவரது நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கல்கி 2898 AD படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மணிகண்டன் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் திட்டத்தில் மணிரத்னம் & டீம் உள்ளனர்.
அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வரும் சூழலில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்திலும் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் எஸ்கே21 மற்றும் சிம்பு நடிப்பில் STR48 படத்தையும் தயாரித்து வருகிறார் கமல். இதில் எஸ்கே 21 படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. STR48 படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்பு பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என சுற்றி சுற்றி இயங்கி வருகிறார். நிற்கக்கூட நேரமில்லாமல் இந்த வயதிலும் அவரது உழைப்பு கண்டிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகத்தை தரக்கூடியதாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான வெற்றியை பெற்றிருந்தார் கமல்ஹாசன். இந்த வெற்றி அவரை மேலும் உற்சாகத்துடன் இயங்க வைத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படததில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: நீண்ட காலங்களாக முடங்கியிருந்த இந்தப் படம் தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு படங்களாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை தரவுள்ளது. கோடைக் கொண்டாட்டமாக இந்தியன் 2 படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதியிலேயே இந்தியன் 3 படமும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே பிரபாசிற்கு வில்லனாக கமல் நடித்துள்ளக கல்கி 2898 AD படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இந்தப் படம் மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
கமல்ஹாசனின் புதிய பதிவு: நடிகராகவும் தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அடுத்தடுத்த படங்களையும் தயாரித்தும் வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் தற்போது அவரது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் எதிரெதிரில் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு இடையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் காணப்படுகிறது. கமல்ஹாசனின் பேச்சுதான் புரியாது என்று பார்த்தால் அவரது நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவும் அதேபோல இருக்கிறதே என்று தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தெல்லுலு தான் புதிய சொல்லுலு: இனிமேல் தெல்லுலு தான் புதிய சொல்லுலு என்ற இந்த பதிவு மற்றும் லோகேஷ் -ஸ்ருதி இணைந்திருக்கும் புகைப்படம் புதிய படத்திற்கான முன்னோட்டமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதை யாராவது டிரான்ஸ்லேஷன் செய்து கொடுங்களேன் என்று ஒரு ரசிகர் அப்பாவித்தனமாக கேட்டுள்ளார். மேலும் ஸ்ருதிஹாசனின் மியூசிக் வீடியோவை லோகேஷ் இயக்குகிறரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் இரு மாதங்களில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான ஸ்கிரிப்ட் வொர்க் மற்றும் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அதனால் அவர் மியூசிக் ஆல்பமே என்றாலும் அதை கமிட் செய்ய மாட்டார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











