Indian 2: தமிழ் புத்தாண்டில் இந்தியன் 2 படம் ரிலீஸ்? அடுத்த ஆண்டில் வெளியாகும் கமலின் 4 படங்கள்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை தற்போது முடித்துள்ளார் கமல்.

தொடர்ந்து தற்போது கல்கி 2898 AD படத்தில் இணைந்துள்ள கமல்ஹாசன், மறுபுறம் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மாஸ் காட்டி வருகிறார்.

இதையடுத்து இந்த மாதத்தில் தனது KH233 படத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Kamal haasans next to next 4 movies going to release next year

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து மிகவும் உற்சாகமாக தனது அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், தற்போது பிரபாஸ் வில்லனாக கல்கி 2898 AD படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தவுடன் அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்: இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் 7ம் தேதி கமல் பிறந்தநாளில் இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதையை கமல்ஹாசன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Kamal haasans next to next 4 movies going to release next year


கமல் பிறந்தநாளில் அப்டேட்கள்: இந்தப் படத்தினை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் KH234 படத்தின் சூட்டிங்கில் அடுத்த ஆண்டில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ப்ரமோ வீடியோ வரும் 7ம் தேதி கமலின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் மணிரத்னம் தற்போது மிகவும் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் நாயகன் 2 என இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டில் இந்தியன் 2 ரிலீஸ்?: இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாகவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில் இந்தியன் 3 படத்திற்காக கமல்ஹாசன் மேலும் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 தீபாவளிக்கு ரிலீசாகும் இந்தியன் 3?: இதனிடையே இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. KH233 மற்றும் KH234 என அடுததடுத்த கமிட்மெண்ட்களை மேற்கொள்ளவுள்ள கமல்ஹாசன், இடையிலேயே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டில் கமலின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. திட்டமிட்டபடி இந்தியன் 2, இந்தியன் 3 வெளியாகும் நிலையில், கல்கி 2898 AD மற்றும் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள KH233 என அடுத்தடுத்து 4 படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X