Thug life: டெல்லி, ஜெய்சல்மாரில் சூட்டிங்கை முடித்த தக் லைஃப் டீம்.. அடுத்து எங்கே சூட்டிங் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்த வயதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக உள்ள சூழலில் அடுத்த மாதத்தில் கல்கி 2898 ஏடி படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளைக் கடந்து கமல்ஹாசன் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லி மற்றும் ஜெய்சல்மாரில் நடந்து வந்த இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Actor Kamal haasan s Thug life movie Delhi schedule completed

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள். இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அவருடன் திரிஷா, சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்த சூழலில் இடையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சூட்டிங் தடைப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஜெய்சல்மார் மற்றும் டெல்லியில் படத்தின் சூட்டிங்கினை தொடர்ந்து மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார்.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: டெல்லியில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் சத்யா பட ஹேர்ஸ்டைல் கமல்ஹாசன் காணப்பட்டார். இந்த புகைப்படத்தில் கமலுடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோரும் இருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகி வருவதாகவும் படத்தில் கமலுக்கு சிம்பு மகனாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அடுத்தக்கட்ட சூட்டிங்: இந்தப் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பாங்காக் மற்றும் செர்பியா ஆகிய இடங்களிலும் படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங் கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டு இந்த ஆண்டின் இறுதியிலேயே படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்த கமல்ஹாசனின் படங்கள் ரிலீசாக உள்ளது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளளதாக கூறப்பட்டுள்ள சூழலில், கல்கி 2898 ஏடி படமும் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த 4 படங்கள்: தக் லைஃப் படமும் இந்த ஆண்டிலேயே ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள சூழலில் இந்த ஆண்டிலேயே கமல்ஹாசனின் நான்கு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடிப்பிலும் தயாரிப்பிலும் தன்னை பிசியாக்கி வருகிறார் கமல்ஹாசன். இது மட்டுமில்லாமல் அரசியலிலும் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னை சிறப்பாக இணைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தன்னை அடுத்தடுத்த களங்களில் அவர் இணைத்து வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X