Kamal Haasan: ராஜஸ்தானில் துவங்கிய தக் லைஃப் சூட்டிங்.. யாரெல்லாம் ஜாயின் ஆகியிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக நடிகர் கமல்ஹாசன் இந்த சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இதனால் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோரின் கால்ஷீட் வீணடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து துல்கர் மற்றும் ஜெயம் ரவி இருவரும் தக் லைஃப் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது. துல்கர் கேரக்டரில் நடிகர் சிம்பு கமிட்டாகியுள்ளதாகவும் ஜெயம் ரவி கேரக்டரில் அரவிந்த்சாமி இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில் தற்போது ராஜஸ்தானின் ஜெய்சலமாரில் படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து சில தினங்களில் படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Kamal haasan s Thug life movie shooting happening in Jaisalmar

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் கமல்ஹாசனின் 234வது படம் தக் லைஃப். படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் செர்பியாவில் திட்டமிடப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். இதனால் இந்த சூட்டிங் தடை பட்டது. நடிகர் ஜெயம் ரவியின் கால்ஷீட்டும் வீணானதாக கூறப்பட்டது.

ஜெய்சல்மாரில் சூட்டிங்: இதையடுத்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் துல்கருக்கு பதிலாக சிம்புவும் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த் சாமியும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ கிளிம்ப்சை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் படத்தின் சூட்டிங் தற்போது நடந்து வருவதாகவும் நடிகர் சிம்பு இடம்பெற்றுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

3 மாதங்களில் நிறைவடையும் சூட்டிங்: இந்தப் படத்திற்காக தொடர்ந்து 2 மாதங்கள் சிம்பு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அவருக்கு அந்த அளவிற்கு அழுத்தமான கேரக்டர் படத்தில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டே சிம்பு எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் திரிஷாவின் போர்ஷன்களும் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் இன்னும் 3 மாதங்களில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஜெய்சல்மார் சூட்டிங்கில் கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டில் ரிலீஸ்: இதனிடையே இந்த சூட்டிங்கில் இன்னும் சில தினங்களில் நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய்சல்மார் சூட்டிங்கை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக டெல்லியிலும் தொடர்ந்து செர்பியாவிலும் அடுத்தடுத்த சூட்டிங்குகள் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 3 மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டில்தான் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சிம்புவின் அடுத்தடுத்த இரு படங்கள் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X