Kamal haasan: செர்பியாவில் துவங்கிய தக் லைஃப் சூட்டிங்.. கமல் எப்ப ஜாய்ன் ஆகிறார்ன்னு பாக்கலாங்களா!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் தக் லைஃப் படத்திற்காக இணைந்துள்ளது. படத்தில் மேலும் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். முன்னதாக சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கப்பட்டு சில தினங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இடம்பெற்றிருந்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது மணிரத்தினம் அண்ட் டீம் செர்பியாவிற்கு அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக சென்றுள்ளனர். அங்கு மற்ற நடிகர்களை வைத்து படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விரைவில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அவர் இந்த இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்காக தொடர்ந்து ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. செர்பியாவின் கமல் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். முன்னதாக தனது செக்க சிவந்த வானம் படத்தின் சூட்டிங்கையும் அவர் செர்பியாவில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Actor Kamal haasans Thug life movie shooting happening in Serbia now

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக் லைஃப். கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெக்ஷமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உட்பட பலரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்டு சில தினங்கள் நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசன், ஜோஜூ ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த கட்டமாக தற்போது மணிரத்னம் மற்றும் அவரது டீம் செர்பியா சென்றுள்ளது.

தக் லைஃப் படம்: அங்கு படத்தின் சூட்டிங் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக மணிரத்னம் லொகேஷன் பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்த சூட்டிங்கில் கமல்ஹாசன் தொடர்பான காட்சிகள் ஆறு நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். தொடர்ந்து செர்பியாவில் அவரது ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து சில தினங்கள் இந்த படத்தின் சூட்டிங் செர்பியாவில் நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங்: இந்த சூட்டிங்கை எடுத்து முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் படக்குழுவினர், அடுத்தடுத்த சூட்டிங்கை வெளிநாடுகளில் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்டமாக சென்னையில் நடக்க உள்ள ஷூட்டிங்கில் கமல்ஹாசன் உடன் நடிகர் ஜெயம் ரவியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தக் லைஃப் படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.

மீண்டும் தொடரும் வெற்றிக் கூட்டணி: 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அதில் ஜாதி பெயரை பயன்படுத்தியதாக சர்ச்சைகள் வெளியாகின. படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக இணைந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X