Thug life: சத்யா பட லுக்கில் கமல்ஹாசன்.. வெளியானது தக் லைஃப் பட லேட்டஸ்ட் கிளிக்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தக் லைஃப். இந்த படத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசன் -மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டெல்லியில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் -சிம்பு காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, கல்கி 2898 ஏடி மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள சூழலில் தக் லைஃப் படம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேங்ஸ்டர் கேரக்டரில் கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்து வருவதாகவும் கிராமத்து பின்புலத்தில் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் லீட் கேரடர்களில் நடித்து வரும் படம் தக் லைஃப், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அழுத்தமான கதைகளைத்துடன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இந்நிலையில் தற்போது தக் லைஃப் படம் எந்த மாதிரியான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் ஜெய்சல்மாரிலும் சில தினங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது டெல்லியில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இங்கு ஒரு மாத காலம் தொடர்ந்து சூட்டிங் நடக்கும் என்று தெரிகிறது. இந்த சூட்டிங்கில் தற்போது கமல்ஹாசன் இணைந்துள்ளார். அவருடன் சிம்பு, நாசர், அபிராமி, வையாபுரி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சத்யா பட லுக்கில் கமல்ஹாசன்: இதில் நடிகர் கமல்ஹாசன் முன்னதாக அவரது நடிப்பில் வெளியான சத்யா படத்தின் லுக்கில் காணப்படுகிறார். சத்யா படத்தின் லுக்கில் கமல்ஹாசன் தற்போது காணப்படுவது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இத்த புகைப்படத்தில் நடிகர் சிம்புவின் லுக்கும் வித்தியாசமாக காணப்படுகிறது. இதனால் இந்தப் படத்தில் மணிரத்னம் ரசிகர்களுக்காக சிறப்பான சம்பவத்தை செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியான சூழலில் அதில் மிகவும் வித்தியாசமான லுக்கில் கமல்ஹாசன் காணப்பட்டார்.
சிம்பு -திரிஷா ஜோடி: இந்நிலையில் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத லுக்கில் தற்போது வெளியாகி உள்ள போட்டோவில் கமல்ஹாசன் காணப்படுகிறார். இதனால் இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நாயகன் படத்தை போலவே மிக சிறப்பான அனுபவத்தை தக் லைஃப் படமும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் பாங்காக், செர்பியா போன்ற இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்கள் காம்பினேஷன் முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பாக அமைந்த சூழலில் தற்போது இந்த படத்தில் மணிரத்னம் இவர்களை எப்படி காட்டுவார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











