சூட்டிங்கை நிறைவு செய்த கமல்ஹாசனின் தக் லைஃப் டீம்.. டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு கோடிக்கு விற்பனையா!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுத்தது/ நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஸ்கோர் செய்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் கமிட்டாகி பிஸியாகி உள்ளார்.
தன்னுடைய நடிப்பு கமிட்மெண்ட்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தவிர்த்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து உள்ளதாக படக்குழு சார்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளை கடந்து உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படத்தில் கமல்ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்துள்ளதாகவும் அவரது ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டம்: தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஒட்டுமொத்தமாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக படத்தின் டப்பிங் பணிகளை கமல், சிம்பு உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் தற்போது 149.7 கோடி ரூபாய்களுக்கு கைமாறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மிகப் பெரிய அளவில் விலை போய் உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம்: படத்தை மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் உதயநிதி உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய மாஸ் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், பொன்னின் செல்வன் 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்தது. இந்நிலையில் அவரது அடுத்த படைப்பான தக் லைஃப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டராக அமைந்தது.
கமலின் அடுத்தப்படம்: இந்நிலையில் தக் லைஃப் படம் எந்த மாதிரியான தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமில்லாமல் விமர்சகர்களும் வெயிட்டிங். நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் என்ட்ரி ஆகி 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை தக் லைஃப் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். 233 படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் கூட்டணியில் தன்னுடைய 234 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











