ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்த கமல்ஹாசனின் தக் லைஃப் டீம்.. Action முதல் Wrap வரை!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணியின் தக் லைஃப் படம் உருவாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மிக அதிக அளவில் காணப்படுகிறது.

படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்புவும் இணைந்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

kamal haasan thug life movie tamil cinema

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தக் லைஃப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். 30 ஆண்டுகளை கடந்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் தக் லைஃப் படம் மூலம் இணைத்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

சூட்டிங் நிறைவு: தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். முதலில் இந்த ஷூட்டிங்கை துவங்கி வைக்கும் மணிரத்னம், தொடர்ந்து Wrap என்று கூறும் வகையில் இந்த வீடியோ காணப்படுகிறது. மிகவும் சிறிய வீடியோவாக இருந்தபோதிலும் கலர்ஃபுல்லாக, ரசிகர்களை கவரும் வகையில் இந்த வீடியோ காணப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடிகர் சிம்பு நடித்துள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பு: தக் லைஃப் படத்தில் சிம்புவின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகி வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். கமல்ஹாசனுக்கு படத்தில் ஜோடியில்லை என்று கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் அடுத்தடுத்த வித்தியாசமான கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அதிக விலைக்கு விற்பனையான டிஜிட்டல் விற்பனை: இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்தப் படததின் டிஜிட்டல் உரிமை 149.7 கோடி ரூபாய்களுக்கு விற்பனை ஆகியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் படங்களில் அதிக விலைக்கு இந்தப் படத்தின் டிஜிட்டல் விற்பனை விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X