Actor Kamal haasan: அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் கமலின் தக் லைஃப்.. அப்ப பீரியட் படம் இல்லையா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை நிறைவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளது.

அடுத்ததாக ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்து அதன் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார் கமல்ஹாசன்.

 Actor Kamal haasan -Maniratnam combination Thug life movie to be a actiion movie

இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் கூட்டணியில் தக் லைஃப் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த மாஸ் படங்களில் இணைந்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான விக்ரம் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளை தொடர்ந்து வருகிறார். ஒருபுறம் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி சரவெடியாக கலக்கி வருகிறார். அடுத்தடுத்த வாரயிறுதி நாட்களின் எபிசோட்களில் நிகழ்ச்சியை சிறப்பாக்கி வருகிறார்.

இந்தியன் 2 படம்: ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் வெளியாகவுள்ள நிலையில், அதிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே பிரபாசுக்கு வில்லனாக கல்கி படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் இரு படங்கள்: இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள kh233 படத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்திலேயே துவங்கவிருந்த நிலையில், தற்போது இந்தியன் 3 படத்தால் இந்தப்படத்தின் சூட்டிங் தாமதமாகி வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் சூட்டிங்குடன் ஒரே சமயத்தில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மணிரத்னத்துடன் கூட்டணி: 35 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப் படத்தின்மூலம் மணிரத்னத்துடன் கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வீடியோவுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது படம் பீரியட் படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படம் பீரியட் படம் இல்லை என்றும் சமகால கதைக்களத்தையே படம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ஷன் படமாக உருவாகும் தக் லைஃப்: சமகாலத்தில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளன. ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காகவே அறிவிப்பு வீடியோவில் பீரியட் படமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது- முன்னதாக விக்ரம் படத்திலும் இதே யுக்தி கையாளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த யுக்தியை தக் லைஃப் படத்திற்கும் கமல்ஹாசன் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X