Vikram 2 movie: இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த விக்ரம் 2 படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் கேரியரில் மிகப் பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ள படம் விக்ரம் 2. இந்தப் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இண்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்த படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எல்சியூவில் விக்ரம் 2 படத்தையும் இணைத்திருந்தார்.
அந்த வகையில் விக்ரம் 2 படத்தில் கைதி படத்தில் நடித்திருந்த கார்த்தி இணைந்திருந்தார். அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற போதிலும் அவரது வாய்ஸ் உள்ளிட்டவை படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடிகர் சூர்யாவும் விக்ரம் 2 படத்தில் அதிரடியாக ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தார். சில நிமிடங்களே இந்த படத்தில் அவர் தோன்றியிருந்த போதிலும் அவரது ரோலக்ஸ் கேரக்டர் மிரட்டியது.

விக்ரம் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான விக்ரம் 2 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. இந்த படம் 400 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்தார். முன்னதாக மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜுக்கு விக்ரம் 2 படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் மிகச்சிறப்பாக அமைத்திருந்தார்.
எல்சியூவை இணைத்த லோகேஷ்: இந்த படத்தின் முதல் பகுதியில் கமல்ஹாசனுக்கு அதிக காட்சிகள் இல்லாத சூழலில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது பகுதியில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் மாஸ் காட்டியிருந்தார். இந்தப் படத்தில் தன்னுடைய எல்சியூவை இணைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி இணைந்திருந்தார். அவர் நேரடியாக இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற போதிலும் அவரது வாய்ஸ் மற்றும் கைதி படத்தில் அவரது மகளாக நடித்திருந்த சிறுமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.
இரண்டு ஆண்டுகள்: இதனிடையே இந்த படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டியிருந்தார். அவரது காட்சிகள் சில நிமிடங்களே படத்தில் வந்த போதிலும் இந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் ரிலீசாகி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இன்றைய தினம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளது. ரசிகர்களும் இந்த படத்தின் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியை தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கூலி படத்தில் லோகேஷ்: இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகவுள்ள கூலி படத்தில் அவர் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் பத்தாம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இதையடுத்து விக்ரம் 2, ரோலக்ஸ் என எந்தப் படத்தில் லோகேஷ் இணைவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











