Kamal haasan: துப்பாக்கியை லாவகமாக கையாளும் கமல்.. விக்ரம் சூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!
சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காயத்ரி, மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது விக்ரம்.
இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.
இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை மிகவும் சிறப்பாக கையாண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் விஜய்யை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியீடு: நடிகர்கள் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, மைனா நந்தினி, மகேஷ்வரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்களை கொண்டு உருவான விக்ரம் படம், கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை கட்டிப்போட்ட நிலையில் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது.
படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அவரது இயக்கத்தில் உருவான 4வது படமாக இருந்தபோதிலும் அவரது இயக்கத்தில் தேர்ந்த இயக்குநரை பார்க்க முடிந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனை வித்தியாமாக காட்டியிருந்தார் லோகேஷ். அவருக்காக படத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படாததே படத்தின் வெற்றியாக கருதப்பட்டது. மேலும் தன்னுடைய இயக்கத்தில் எந்தவிதமான தலையீட்டையும் செய்யாமல் சுதந்திரமாக செயல்பட தன்னை கமல் அனுமதித்ததாகவும் லோகேஷ் படத்தின் பிரமோஷனின்போது தெரிவித்திருந்தார்.
படத்தில் ஏராளமான கேரக்டர்கள் இருந்த நிலையில் அனைவருக்கும் சிறப்பான காட்சி அமைப்புகளை கொடுத்திருந்தார் லோகேஷ். ஏஜெண்ட் டீனா உள்ளிட்ட பல கேரக்டர்கள் தற்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ளன. இந்தப் படத்தின் அடுத்த பாகமும் உருவாக உள்ளதாக படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.
லோகேஷும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் இணைவாரா அல்லது கைதி 2 படத்தை இயக்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே அவர் தெலுங்கில் முன்னணி ஹீரோவுடன் கைக்கோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தன்னுடைய எதிரிகளை துப்பாக்கியை கொண்டு கமல் எதிர்கொள்ளும் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்தன. அந்த வகையில் துப்பாக்கியை கமல்ஹாசன் லாவகமாக கையாளும் விதம் மற்றும் அதை படமாக்க படக்குழுவினர் மேற்கொண்ட செயல்கள் தற்போது சூட்டிங் ஸ்பாட் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இருங்க குழந்தை என்று டயலாக் அடித்துவிட்டு டிரம்மை உதைத்து தள்ளிவிட்டு துப்பாக்கியை எடுக்கும்போது கமல் ஸ்டைல் பின்னி பெடலெடுக்கிறது.


Click it and Unblock the Notifications











