''விக்ரம்'' சர்ப்ரைஸ்.. கமல் எழுதிய குத்துப்பாட்டு… பிறந்த நாளுக்கு வெளியிட படக்குழு முடிவு !

சென்னை : விக்ரம் திரைப்படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அனைவரையும் ஆட்டம் போடவைக்கும் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த பாடல் கமலின் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கமலின் ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாகி பிறந்த நாளை எதிர்நோக்கி உள்ளனர்.

விக்ரம்

விக்ரம்

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கமல் தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய பிரபலங்கள்

முக்கிய பிரபலங்கள்

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குத்துப்பாடல்

குத்துப்பாடல்

இந்நிலையில், விக்ரம் படத்திற்கு கமல்ஹாசன் ஆட்டம் போடவைக்கும் ஒரு குத்துப்பாடலை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "பத்தல பத்தல" எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கமல்ஹாசனே அந்த பாடலை பாடியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

கமலஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ந் தேதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த பாடலை விக்ரம் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமல் ரசிகர்கள் அவரின் பிறந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

விக்ரம் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியத்தில் படப்பிடிப்புநடத்த விக்ரம் படக்குழு அனுமதி கோரியது. ஆனால் அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கான காரணத்தையும் விரிவான பதில் கடிதத்தில் கூறி உள்ளது.

இந்தியன் 2

இந்தியன் 2

விக்ரம் படத்துக்கு முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கமல். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின்போது லைகா நிறுவனம் ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சினை உருவானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X