ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திய நபரின் சிறப்பான சம்பவம்... பாராட்டிய உலகநாயகன்
சென்னை : மழைக்காலத்தில் சென்னை மட்டுமின்றி அனைத்து இடங்களும் ஸ்தம்பித்து விடுவது இயல்புதான்.
போக்குவரத்து காவலர்கள் இருந்தால் அவர்கள் போக்குவரத்தை சரி செய்வார்கள்.
ஆனால் போக்குவரத்து காவலர்கள் இல்லாத இடங்களின் போக்குவரத்து கேள்விக்குறிதான்.

சென்னை மழை
சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் இந்த ஆண்டு மழை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பாதிப்புக்களை இந்த மழை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க மழையால் அன்றாடம் போக்குவரத்து பாதிப்பிற்கும் மக்கள் உள்ளானார்கள். கொரோனா காரணமாக ஏராளமானோர் வீட்டிலிருந்து வேலை செய்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் அவர்கள் தங்களது அலுவலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டனர்.

போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மழையில் இந்த பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து காவலர்கள் உள்ள இடங்களில் இந்த பாதிப்பு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடும். ஆனால் அவர்கள் இல்லாத இடங்களில் நிலை அதோகதி தான்.

கமல் பாராட்டு
இந்நிலையில் இத்தகைய மழை நாளில் சென்னை சாலை போக்குவரத்து ஸ்தம்பித்த ஒரு நாளில், ஆம்புலன்சுக்கு ஒன்றை மனிதராய் வழி ஏற்படுத்திக் கொடுத்த ஜின்னா என்பவருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். திடமான ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் இதன் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னலமில்லா செயல்
தன்னுடைய பணி முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த ஜின்னா அண்ணாசாலையில், ஆம்புலன்ஸ்கள் வழி இல்லாமல் சிக்கிக் கொண்டிருந்ததை பார்த்து, தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, ராஜிவ் காந்தி மருத்துவமனை வரை ஏறக்குறைய 4 கிலோமீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சரி செய்துள்ளார்.

வைரலான வீடியோ
இதையடுத்து ஆம்புலன்சுகளுக்கும் அவர் வழி ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து சுயநலம் இல்லாமல் செயலாற்றிய ஜின்னாவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாராட்டி, அவர் உதவிய வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











