twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 விபத்து.. கமலிடம் 2.30மணி நேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸ்.. நடந்தது என்ன?

    |

    சென்னை: இந்தியன் 2 விபத்து தொடர்பக நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

    Recommended Video

    Indian 2 Shooting Spot | Crane Crash | Sankar Compensation

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி இரவு படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வந்தது. இரவில் பகலில் எடுக்கப்படும் காட்சி ஒன்று படம்பிடிக்கப்பட்டது.

    சரிந்த கிரேன்

    சரிந்த கிரேன்

    இதற்காக ராட்சத கிரேன்களில் பெரிய பெரிய லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. இரவு 9.30 மணிக்கு இடைவேளை விடுக்கப்பட்டது. அப்போது இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் சற்று தள்ளி நிற்க, லைட்டுகள் கட்டப்பட்டிருந்த ராட்சத கிரேன் வெய்ட் தாங்க முடியாமல் திடீரென சரிந்து விழுந்தது.

    3 பேர் பலி

    3 பேர் பலி

    இதில் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனும் உதவி இயக்குநருமான கிருஷ்ணா மற்றும் தயாரிப்பு பிரிவை சேர்ந்த சந்திரன் மற்றும் மது ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக நசரத் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஷங்கர் ஆஜர்

    ஷங்கர் ஆஜர்

    மேலும் இந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான வழக்கு மத்திய குற்றப்புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து விபத்து தொடர்பான விசாரணைக்கு கடந்த 27ஆம் தேதி இயக்குநர் ஷங்கர் ஆஜரானார்.

    கமல் ஆஜர்

    கமல் ஆஜர்

    அப்போது அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் நடிகர் கமல் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

    ஆஜராகி விளக்கம்

    ஆஜராகி விளக்கம்

    படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை எடுத்துக்கூறினேன். உயிர் தப்பியோரில் நானும் ஒருவன், விபத்தில் இறந்தவர்களுக்கு செய்யும் கடமையாக எண்ணி ஆஜராகி விளக்கம் அளித்தேன்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    படப்பிடிப்பில் விபத்து நடக்காமல் தடுப்பது குறித்தும் போலீசாரிடம் ஆலோசித்தேன். விரைவில் எங்களது துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் விபத்துக்களை தடுப்பது குறித்து சந்தித்து பேசவுள்ளோம். இவ்வாறு நடிகர் கமல் தெரிவித்தார். நடிகர் கமல் ஆஜரானதால் சிபிசிஐடி போலீஸ் அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

    English summary
    Actor Kamal hassan appeared in front of CBCID police for Indian 2 shooting accident. 3 people dead in Indian 2 accident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X