For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு!

  |
  Kamal Hassan Success Secrets: எதிர்காலத்தை கணித்த கமல் படங்கள்

  சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

  தமிழ்த் திரைத்துறைக்கு களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அட்சய பாத்திரம் கமல்ஹாசன். இதுவரை நுற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார். இன்னமும் நடித்து வருகிறார்.

  ஒவ்வொரு படமும் அவரின் நடிப்பின் திறமையை பேசும் காவியங்கள். குறிப்பாக மூன்றாம் பிறை, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, குணா, இந்தியன், தெனாலி, அன்பே சிவம், தசாவதாரம், சிவப்பு ரோஜாக்கள், சலங்கை ஒலி, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், ஹேராம்.. என சொல்லிக்கொண்டே போகலாம்.

  பெருமை சேர்த்தவர்

  பெருமை சேர்த்தவர்

  இந்த படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பொக்கிஷங்கள். தமிழ் மட்டுமின்றி, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் நடித்து தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்தவர்.

  அடைமொழி

  அடைமொழி

  கமல்ஹாசனுக்கு உலக நாயகன் என்ற அடைமொழியை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்தான். தான் இயக்கிய தசாவதாரம் படத்தில் அதற்கென ஒரு பாடலையே வைத்து அதகளப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு படத்தையும் தனது முதல் படம் என்பதை போன்ற ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் நடித்துக்கொடுப்பவர் என அவரை இயக்கிய பல இயக்குநர்கள் கூறியது உண்டு.

  காலை 4 மணிக்கே

  காலை 4 மணிக்கே

  அவ்வை ஷண்முகி, இந்தியன் போன்ற படங்களின் போது தனது காலை உணவை அதிகாலை 4 மணிக்கே முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவாராம் கமல். காரணம்.. அந்த படங்களில் அவர் நடித்த கேரக்டர்களுக்கு மேக்கப்போட அதிக நேரம் செலவாகும் என்பதால்.

  பல முகங்கள்

  பல முகங்கள்

  சிறந்த நடிகர் மட்டுமின்றி, சிறந்த இயக்குநர், சிறந்த நடன கலைஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த பாடகர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த கதையாசிரியர் என பல முகங்களை கொண்டவர் கமல்ஹாசன்.

  நடிப்பு டிக்ஷ்னரி

  நடிப்பு டிக்ஷ்னரி

  தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் சில மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய வல்லமை பெற்ற கலைஞன். இன்றைய இளம் நடிகர்கள், கமல் வாயால் பாராட்டை பெற மாட்டோமா ஏங்கி நிற்கும் நடிப்பு டிக்ஷ்னரி கமல்.

  காதல் மன்னன்

  காதல் மன்னன்

  நான்கு தேசிய விருதுகள், 18 பிலிம் பேர் விருதுகளை குவித்த மகா கலைஞன் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி கமலின் சாதனைகளையும் திறமையையும் கண்டு வியந்து போன மத்திய அரசாங்கம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை கொடுத்து கவுரப்படுத்திய காதல் மன்னன்.

  சிறந்த ஆளுமை

  சிறந்த ஆளுமை

  சினிமாவை பொறுத்தவரை கமலுக்கு தெரியாத பணிகள் என்று ஏதும் இல்லை. சினிமா தொடர்பான அனைத்தையும் அறிந்த சகலகலா வல்லவன். தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளாய் கோலொச்சும் சிறந்த ஆளுமை.

  இடுப்பில் வைத்திருக்கிறாள்

  இடுப்பில் வைத்திருக்கிறாள்

  இத்தனை சிறப்புகளை கொண்டதால்தான் தமிழ் சினிமாவில் கமல் தனது பொன்விழாவை கண்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்றோரும் சான்றோரும் அமர்ந்திருந்த மேடையில் கலைத்தாய் எங்களை போன்ற கலைஞர்களை கையைப்பிடித்து அழைத்து செல்கிறாள்.. ஆனால் கமலை மட்டும் இடுப்பில் தூக்கி வைத்து செல்கிறாள் என்றார்.

  நான் தொடவில்லை

  நான் தொடவில்லை

  உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் என்றாலும், இருவருக்கும் இடையில் போட்டி இருப்பதாக கூறப்படுவதை நிராகரித்த ரஜினிகாந்த், எந்த வகையிலும் உங்களுக்கு நான் போட்டியில்லை. சினிமாவில் நீங்கள் தொட்ட உயரத்தை நான் தொடவில்லை என்றார். கமலின் சாதனை என்ன என்பதை புரிந்துகொள்ள இந்த ஒரு வார்த்தையே போதுமானது.

  பெருமைகொள்ளுது நாடு!

  பெருமைகொள்ளுது நாடு!

  கமல்ஹாசன் போன்ற ஒரு கலைஞனை.. கலை ஞானியை.. கலைத்தாயின் இளையமகனை இதுபோன்ற சிறப்பான ஒரேநாளில் ஒரு செய்தியாக சுருக்கி விட முடியாது. கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சாதனையை சொல்ல இந்த ஒரு பிறந்த நாள் போதாது.. உலக நாயகனே உன்னை பெற்றதில் பெருமைகொள்ளுது நாடு!

  English summary
  Actor Kamal hassan celebrates his 65th birthday today. He has done many unbreakable records in Tamil cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X