நம்பவே முடியல.. சிண்ட்டு ஜி.. என்னுடைய நண்பரை இழந்துவிட்டேன.. நடிகர் கமல் உருக்கம்!

சென்னை: பிரபல நடிகர் ரிஷி கபூரின் மறைவை நம்ப முடியவில்லை என நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக 2018ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுமார் ஓராண்டு சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் மும்பைக்கு திரும்பினார் நடிகர் ரிஷி கபூர். சிகிச்சை இறுதி கட்டத்தை நெருங்கிய போதே தான் குணமடைந்துவிட்டதாக நம்பினார் ரிஷி கபூர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இருப்பினும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து அவரது மகனும் நடிகருமான ரன்பீர் கபூரும் அவரது தாயாரான நீத்து சிங் ஆகியோர் மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில் இன்று காலை ரிஷி கபூர் மரணமடைந்தார். அவரது திடீர் மரணத்தால் பாலிவுட் பிரபலங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு பாலிவுட் மட்டுமின்ற இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்ல நட்பு

நல்ல நட்பு

இந்நிலையில் ரிஷி கபூரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கமல் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியில் ரிஷி கபூர் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார். அப்போதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

நம்ப முடியல..

நம்ப முடியல..

இந்நிலையில் ரிஷிகபூரின் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், நம்ப முடியவில்லை. சிண்ட்டு ஜி..(மிஸ்டர் ரிஷி கபூர்) எப்போதும் சிரிப்புடன் தயாராக இருந்தார். நாம் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தோம். என்னுடைய நண்பரை இழந்துவிட்டேன்.. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.. என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இவ்வளவு சீக்கிரமா

இவ்வளவு சீக்கிரமா

நேற்று பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்பான் கான் இறந்தபோது இவ்வளவு சீக்கிரம் போகனுமா இர்பான்ஜி, நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசைப்பட்டேனே என உருக்கமாக கூறியிருந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X