மிஸ்டர் ப்ளு சட்டை.. ஜிப்ஸி படத்தை கேவலமா பேசுனீங்க.. கமல் என்ன பண்ணியிருக்காரு பாருங்க!

சென்னை: ஜிப்ஸி படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

GYPSY REVIEW | CENSORED REPLY TO BLUE SATTAI | FILMIBEAT TAMIL

ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராஜு முருகன். அவரது இயக்கத்தில் அண்மையில் வெளி வந்த திரைப்படம் ஜிப்ஸி.

இந்தப் படத்தில் நடிகர் ஜீவா, நடிகை நாடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஜிப்ஸி படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைத்துள்ளார்.

மதக்கலவரம்

மதக்கலவரம்

இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்தின் புரமோவில் இடம்பெற்ற காட்சிகள் கூட படத்தில் இல்லை. அந்தளவுக்கு படத்தில் தணிக்கை குழு கை வைத்திருக்கிறது. இருப்பினும் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வாரணாசி மதக்கலவரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கமல் பாராட்டு

கமல் பாராட்டு

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். ஜிப்ஸி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இழிவான விமர்சனம்

இழிவான விமர்சனம்

ஆன்லைன் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஜிப்ஸி படத்தை தரக்குறைவாக விமர்சித்து மிகவும் இழிவாக பேசியிருந்தார். குறிப்பாக நடிகர் ஜீவாவை பிச்சைக்கார நாய், பிச்சைக்காரன், பொறுக்கி, பொறம்போக்கு என கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். படத்தின் ஹீரோயினான நாடாஷ சிங்கையும் லூசு கிறுக்கு என்று கூறியிருந்தார்.

ப்ளு சட்டைக்கு பதிலடி

ப்ளு சட்டைக்கு பதிலடி

மேலும் சமீபத்தில் வெளியான படங்களிலேயே ராஜு மோகனின் ஜிப்ஸி படம் தான் மோசமானது என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த தரக்குறைவான விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர், உலக நாயகன் என போற்றப்படும் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் பாராட்டியிருப்பது ப்ளு சட்டை மாறனுக்கு கொடுக்கப்பட்ட மரண அடியாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X