அமெரிக்கா டு செர்பியா கமல்ஹாசனின் வேற லெவல் பிளான்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். அவரது விக்ரம் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களை அறிவித்து செயல்பட்டு வருகிறார். தற்போது இந்தியன் 2, இந்தியன் 3 படங்களை நிறைவு செய்துள்ளார்.

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது கல்கி 2898 AD படத்தையும் முடித்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக அவர் நடித்துள்ளார். இதனிடையே தற்போது மணிரத்தினத்தின் தக் லைப் படத்தின் ஷுட்டிங்கிலும் அவர் பிஸியாக இணைந்து நடித்து வருகிறார்.

 Actor Kamal hassan plans to join thug life shooting in Serbia soon

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் திரையுலக பயணம் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்பதாக ஆரம்பித்தது. தொடர்ந்து தற்போது தன்னுடைய 70ஆவது வயதிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார். பல இளம் நடிகர்களுக்கு உத்வேகமாகவும் காணப்படுகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அவரது விக்ரம் படம் மிகச் சிறப்பான வகையில் ஹிட் கொடுத்தது. கமலுக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்த படம் சிறப்பாக அமைந்தது.

விக்ரம் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் நீண்ட மாதங்களாக முடங்கி கிடந்த தன்னுடைய இந்தியன் 2 படத்தை கையில் எடுத்து அதை தற்போது நிறைவு செய்துள்ளார் கமல்ஹாசன். இந்த தாமதத்திலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இந்த படம் தற்போது இந்தியன் 3 ஆகவும் உருவாகியுள்ளது. இந்த ஆண்டிலேயே விக்ரம் 2 மற்றும் விக்ரம் 3 திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக பட குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விருவிருப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே பிரபாஸுக்கு வில்லனாக கல்கி 2898 AD படத்திலும் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த படத்தின் அடுத்த பாகமும் விரைவில் சூட்டிங் துவங்க உள்ளது. தற்போது மணிரத்தினத்தின் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இல் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதன் முதல் கட்ட சூட்டிங் சில தினங்கள் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட சூட்டிங்ிற்காக பட குழுவினர் செர்பியா சென்றுள்ளனர்.

தற்போது கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளார். அங்கிருந்து அவர் நேரடியாக செர்பியா சென்று தக் லைப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். முன்னதாக படத்தின் லொகேஷன்களை இறுதி செய்வதற்காக மணிரத்னம் உள்ளிட்டவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

சென்னையில் நடைபெற்ற படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கில் கமல்ஹாசன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் தற்போது செர்பியாவில் நடக்க உள்ள இரண்டாவது கட்ட சூட்டிங்கில் கமல்ஹாசன் உடன் த்ரிஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான சரியான திட்டமிடலுடன் தற்போது மணிரத்தினம் இன்னும் சில தினங்களில் ஷூட்டிங்கை துவங்க உள்ளார்.

தக் லைப் ஷூட்டிங்கை இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்துவிட்டு இந்த ஆண்டிலேயே படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு அடுத்ததாக கல்கி 2898 AD படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஷூட்டிங்கிலும் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கல்கி படத்தின் முதல் பாகம் தற்போது ரிலீஸுக்காக தயாராகி வருகிறது. வரும் மே மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X