For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  20 வருஷம் ஆயிடுச்சா.. கமல்ஹாசன் எனும் அரக்கனின் அசாத்திய படைப்பு.. ஹேராம்! #20YearsOfHeyRam

  |

  சென்னை: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ஹேராம் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆவதையொட்டி டிவிட்டரில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

  பின்னர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் டூயட் பாட தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் நடன இயக்குநராகவும் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரபலங்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

  60 ஆண்டுகள்

  60 ஆண்டுகள்

  நடிகராக அறிமுகமானாலும் இயக்குநர், கதையாசிரியர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் தொழில் நுட்ப வித்தகர், பாடகர் பாடலாசிரியர் என பல முகங்களை கொண்ட தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக கோலோச்சி வருகிறார். தமிழ் சினிமாவில் 5 வயதில் அடியெடுத்து வைத்த நடிகர் கமல்ஹாசன், தனது 60 ஆண்டு கால வாழ்க்கையை சினிமாவுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.

  ராஜ்கமல் பிலிம்ஸ்

  ராஜ்கமல் பிலிம்ஸ்

  தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவரே எழுதி இயக்கி நடித்த படம்தான் ஹேராம். கடந்த 2000ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது.

  வரலாற்று படம்

  வரலாற்று படம்

  இந்தப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தியாவின் பிரிவினை மற்றும் மகாத்மா காந்தி நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் மாற்று வரலாற்று படமாக இருந்தது இப்படம்.

  மூன்று தேசிய விருதுகள்

  மூன்று தேசிய விருதுகள்

  இந்தப் படத்தில் பாலிவுட் நடிகரான ஷாருக் கானும் நடித்திருந்தார். இப்படத்தின் இந்தி வெர்ஷனை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் விநியோகித்தது. இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை குவித்தது. சிறந்த நடிகருக்கான தென்னிந்திய பிலிம் ஃபேர் விருதை பெற்றார் கமல்ஹாசன்.

  20 ஆண்டுகள்..

  20 ஆண்டுகள்..

  இதேபோல் பெங்கால் பிலிம் ஜர்னிலிஸ்ட் அசோசியேஷன், அந்த ஆண்டின் மிகச் சிறந்த படைப்பாளிக்கான விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் இப்படம் ரிலீஸாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இதனை கமல்ஹாசனின் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

  அசாத்திய படைப்பு

  டிவிட்டரில் #20YearsOfHeyRam என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மேலும் படம் குறித்து ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, கதை கூறும் விதம், ஒளிப்பதிவு, கலை , நடிப்பு, என அனைத்திலும் உச்சம் தொட்ட திரைக்காவியம் கமலஹாசன் எனும் அரக்கனின் அசாத்திய படைப்பு நன்றிகள் பல என்கிறார் இந்த ரசிகர்.

  கமலை நீக்கினால்

  இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர். இந்த ரசிகர், சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம், தமிழ் சினிமா, கமல் சினிமா. கமல் சினிமா வை நீக்கி விட்டு பார்த்தால், வெறும் வெற்று மசாலா குப்பைகளே மிஞ்சும் என்று கமலை புகழ்ந்திருக்கிறார்.

  Shocking! Rajini Kamal 169 Directs Lokesh Kanagaraj | Master

  அசாதாரண நடிப்பு

  இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருக்க வேண்டும் எனப் பொது மேடைகளில் பேசிய ஒரே நடிகர் கமல்தான். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும், குரல் கொடுத்தது தனி வரலாறு. பல முறை பார்த்து ரசித்த உலக தரம் வாய்ந்த திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை எனபது ஒரு வருத்தமாக உள்ளது. திரு கமலஹாசன் அவர்களின் அசாதாரண நடிப்பு திறமை இப்படத்தில் வெளிப்பட்டு இருக்கும் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

  English summary
  Actor Kamal hassan's Hey Ram movie completes 20 years in Tamil cinema. Kamal fans celebrates and #20YearsOfHeyRam hashtag is trending on twitter.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X