அப்போதே உங்களை பிடித்துவிட்டது.. நீங்கள் நீடுழி வாழணும் தம்பி.. மோகன்லாலுக்கு கமல் வாழ்த்து!

சென்னை: நடிகர் மோகன் லாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Shocking Shruti Hassan! கமல் ஹாசன் மகள் இல்லையா? | புதிய குழப்பம் | Kamal Hassan, Sariga

மலையாள சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் மோகன் லால். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

 Actor Kamal hassan wishing Mohanlal for his birthday

40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் மோகன் லால் இதுவரை 340க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 5 தேசிய விருதுகளை பெற்றுள்ள மோகன் லால் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

தமிழில் இருவர், ஜில்லா, உன்னைப்போல் ஒருவன், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி அவரது பல படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் மோகன் லால் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு அவருக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

 Actor Kamal hassan wishing Mohanlal for his birthday

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், டியர் மோகன்லால் உங்களின் முதல் படத்திலிருந்தே உங்களை எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு திருப்பத்திலும் பதுங்கியிருக்கும் எதிர்ப்பாளர்களுடன், உங்கள் வேலையின் நிலையான தரத்தை பார்த்து உங்கள் மீது பொறாமைப்பட்டேன். நான் உங்களுடன் பணிபுரிந்தபோது உங்களை எனக்கு இன்னும் அதிகமாக பிடித்து விட்டது. நீடூழி வாழ வேண்டும் என் தம்பி.. இவ்வாறு கமல் தனது வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X