twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 பேர் பலியான விவகாரம்.. மிகுந்த மன வேதனையுடன் எழுதுகிறேன்.. லைகாவுக்கு நடிகர் கமல் திடீர் கடிதம்!

    |

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீரென கடிதம் எழுதியிருக்கிறார்.

    Recommended Video

    Director Pavithran shouts on Kamal Hassan

    நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கடந்த 19ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு படப்பின் இடைவேளையின் போது, லைட்டுகள் கட்டப்பட்டிருந்த உயரமான கிரேன் சரிந்து கீழே விழுந்தது.

    இந்தியன் 2 விபத்து

    இந்தியன் 2 விபத்து

    இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு பிரிவை சேர்ந்த மது, சந்திரன் ஆகிய மூன்று பேரும் கிரேனுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு பிறகு இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

    நடிகர் கமல் கடிதம்

    நடிகர் கமல் கடிதம்

    இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர், கிரேன் உரிமையாளர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது நசரத் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு அண்மையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

    மிகுந்த மன வேதனையுடன்

    மிகுந்த மன வேதனையுடன்

    லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், மிகுந்த மன வேதனையுடன் எழுதுகிறேன், 19ஆம் தேதி நடந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை. நம்முடன் சிரித்துப் பேசி பணியாற்றிய சிலர் இப்போது இல்லை. அவர்கள் திரும்பி வரப்போவதும் இல்லை.

    மயிரிழையில் தப்பினேன்

    மயிரிழையில் தப்பினேன்

    விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் தான் நான் தள்ளி இருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். என்னுடைய வேதனையை வார்த்தைகளில் சொல்ல முடியாது. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இதுபோன்ற விபத்துகள் படப்பிடிப்புக் குழுவினரின் நம்பிக்கையை இழக்க செய்யும். என்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு முழுமையாகவும் உடனடியாகவும் வழங்கப்படவேண்டும்.

    முழு ஆதரவும்..

    கலைஞர்கள், தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாதுகாப்பு மற்றும் காப்பீடு தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எனக்கு புரிய வேண்டும்.
    காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையும் அவர்களின் குடும்பத்தினருக்கு பண ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் முழு ஆதரவையும் வழங்கவேண்டும்.

    படக்குழுவினருக்கு நம்பிக்கை

    படக்குழுவினருக்கு நம்பிக்கை

    எந்த இழப்பு, சேதம், ஆபத்து என என்ன நடந்தாலும் அதற்கான இழப்பீட்டை தயாரிப்பு நிறுவனம் தான் வழங்க வேண்டும். எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். இதன்மூலம் நான் உள்பட படப்பிடிப்புக் குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்குத் திரும்ப வழி செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Actor Kamal hassan writes letter to Lyca productions about employees safety. 3 people dead in accident at shooting spot on 19th Feb.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X