ரசிகர்களோடு ரசிகராக.. விக்ரம் முதல் காட்சியைப் பார்க்கும் கமல்.. எந்த தியேட்டரில் தெரியுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களோடு ரசிகராக விக்ரம் படத்தின் முதல் காட்சியை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் ஜூன்3ந் தேதி வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன்,மைனா நந்தினி, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

விக்ரம்

விக்ரம்

உலகநாயகன் நடிப்பில் 2018ம் ஆண்டில் வெளியாக விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டு கழித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம். இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.

விக்ரம் 2?

விக்ரம் 2?

காடுனு ஒன்னு இருந்தா.. சிங்கம், புலி, சிறுத்தை இருக்கும் என்று கமலின் கர்ஜிக்கும் குரலில் டிரைலர் மிரட்டலாக வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு விக்ரம் என படத்திற்கு தலைப்பு வைத்ததும் விக்ரம் 2 என பல இளசுகள் 1986ம் ஆண்டு வெளியான விக்ரம்படத்தை தேடி தேடி பார்த்து வருகின்றனர். பழைய விக்ரம் படத்திற்கும் இந்த விக்ரம் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, லோகேஷ் கனகராஜ் தான் விக்ரம் என பெயர் வைக்கவேண்டுமென ஆசைப்பட்டதாக கூறினார்.

பல அர்த்தம்

பல அர்த்தம்

அதுமட்டும் இல்லாமல் விக்ரம் படத்திலிருந்து வெளியான பத்தல பத்தல பாடலை கமலே எழுதி பாடி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கமலின் குரலில் பாடலை கேட்டதில் கமலின் தீவிர ரசிகர்கள் குஷிஆகினார். பத்தல பத்தல பாடலில் அரசியல் நெடி இருப்பதாக நிறைய பேர் சர்ச்சையை கிளப்புகிறார்கள். ஆனால் தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கமல் கூறியிருந்தார்.

விக்ரம் படத்தின் கதை

விக்ரம் படத்தின் கதை

மேலும், விக்ரம் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியான நிலையில், படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, கடத்தப்பட்ட அரசு அலுவலர் ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபடுகிறார். இதுதான் விக்ரம் திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது திரை ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது.

ரசிகர்களோடு ரசிகராக

ரசிகர்களோடு ரசிகராக

இந்நிலையில், நாளை வெளியாக உள்ள விக்ரம் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து பார்க்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் ரோகினி திரையரங்கில் அதிகாலை 4 மணிக் காட்சியை ரசிகர்களோடு இணைந்து கமல் பார்க்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X