Kamal: கமல் பிறந்தநாளில் மிரட்ட தயாராகும் KH234 பட டீசர்.. 5 நாட்கள் நடிக்கும் உலகநாயகன்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் -இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH234 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில்தான் துவங்கவுள்ளது.
தற்போது இந்தியன் 2, கல்கி 2898 AD படங்களில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னத்துடன் KH234 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் உலகநாயகன்.

கமல் பிறந்தநாளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள KH234 பட டீசர்: நடிகர் கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது- இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் தன்னுடைய தயாரிப்பில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களை உருவாக்கி வருகிறார் கமல்ஹாசன்.
நடிப்பிலும் தற்போது ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் பிரபாசுக்கு வில்லனாக கல்கி 2898 AD படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோரின் இயக்கங்களில் KH233 மற்றும் KH234 கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன். இதில் குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ள ஹெச் வினோத்தின் படத்தை தொடர்ந்து மணிரத்னத்துடன் KH234 படத்திலும் இணைகிறார்.
நீண்ட காலங்களுக்கு பிறகு கமல் -மணிரத்னம் இணையவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் இடையிலும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் அப்டேட் குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு சைமா விருது விழாவில் லோகேஷ் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்ப தயாரிப்பாளர் கமல் பதில் சொல்வார் என்று அவர் கைகாட்ட, மேடையே கலகலப்பானது. படம் குறித்து எந்தவித பரபரப்பும் இல்லாமல் வேலை செய்யவுள்ளதாக கமல் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணையவுள்ளது. படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்ததாக மன்சூர் அலிகான், நாசரும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கமல் பிறந்தநாளையொட்டி விக்ரம் படத்தின் மிரட்டலான டீசர் வெளியான நிலையில், இந்த ஆண்டு கமல் பிற்தநாளையொட்டி KH234 படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த டீசரை பிரம்மாண்டமாக வெளியிட்டு, அதன்மூலம் KH234 படத்தின் அறிவிப்பையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாச்ன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் கமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த டீசரில் நடிக்க மட்டுமே கமல்ஹாசன் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











