Kamal haasan: ரஜினிக்கு சம்பளம் கொடுக்க முடியலைன்னா வேற நடிகர்களை பிக்ஸ் பண்ணுங்க.. கமல் ஓபன்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.
இந்தியன் 2 படம் குறித்தும் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் இவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். தற்போது படத்தின் பிரமோஷனுக்காக மலேசியாவிற்கும் இவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் கமல் கொடுத்த பேட்டியொன்றில் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் கூறியுள்ள பதில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: கல்கி 2898 AD படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கிறது இந்தியன் 2 படம்/ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது இந்நிலையில் 28 ஆண்டுகளை கடந்து இந்த படத்தின் 2வது பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கமல்ஹாசனுடன் ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் வரும் ஜூலை 12ம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் சர்வதேச அளவில் நடக்க உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களுக்காக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட டீம் இணைந்துள்ளனர்.
இந்தியன் 2 பட பிரமோஷன்கள்: இந்தியன் 2 படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை இவர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் படம் குறித்தும் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கமல்ஹாசன் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையே இத்தகைய பேட்டியொன்றில் நடிகர்களின் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளம் தாறுமாறாக உயர்ந்துள்ளது குறித்தும் இது குறித்து தயாரிப்பாளர் கவுன்சில் மீட்டிங் ஒன்றை திட்டமிட்டுள்ளது குறித்தும் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நடிகர்களின் சம்பளம் மிக அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் இதனால் பல படங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது குறித்தும், அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ரஜினி சம்பளம் குறித்து கமல் பதில்: இந்தக் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் அவரை ஒரு படத்திற்கு புக் செய்யாமல் வேறு நடிகரை தேடிக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஜினி வேண்டும் என்றால் இந்த சம்பளத்தை கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல சமயங்களில் தானும் ரஜினிகாந்தும் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேரக்டரை செலக்ட் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர்களின் அதிகப்படியான சம்பளம்: ரஜினிகாந்த் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரை தன்னுடைய படத்தின் நடிக்க வைக்க தயாரிப்பாளர் விரும்பினால் அவருக்கு, அவர் விரும்பும் சம்பளத்தை கொடுக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் நடிகர்களின் அதிகப்படியான சம்பளத்தை ஆதரிக்கிறாரா என்று தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. படங்களில் அதிகப்படியான செலவை நடிகர்களின் சம்பளமே இழுத்து விடுவதால் பல படங்கள் முடிக்கப்படாமல் முடங்குவது கோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்து வருகிறது. இதனிடையே கல்கி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கமல்ஹாசனும் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











