விக்ரம் வெற்றியின் மூலம் அறுவடை முயற்சி.. 3டி -டால்பி தொழில்நுட்பத்தில் வெளியாகும் கமல் படம்!
சென்னை : நடிகர் கமலின் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது விக்ரம் படம்.
இந்தப் படம் கடந்த 8ம் தேதி ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தின் சிறப்பான வெற்றி, கமலின் மற்ற படங்களுக்கு மீண்டும் வழியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்
நடிகர் கமல் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருபவர். இவரது பல படங்கள், ஹாலிவுட் தரத்தில் ரசிகர்களை கவர்ந்தவை. இந்த முயற்சியில் இவர் சில சமயம் பாமர ரசிகர்களை மனதில் எடுத்துக் கொள்ளாமல் விட்டதன் விளைவு இவரது சிறப்பான படங்கள்கூட வசூலை குவிக்காத நிலை காணப்பட்டது.

கமலின் விக்ரம் படம்
அந்த வகையில் இவரது பல படங்கள் சிறப்பான வசூலை குவிக்கத் தவறின. ஆனால் இந்தப் படங்கள் விமர்சன ரீதியாக சிறப்பாக அமைந்தன. இந்நிலையில் தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படம் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறப்பான விமர்சனம்
இந்தப் படத்தைக் காட்டிலும் பல சிறப்பான முயற்சிகளில் கமல் பல படங்களில் நடித்திருந்தாலும் விக்ரம் படம் தற்போது சிறப்பான வசூலை குவித்துள்ளது. 450 கோடி ரூபாய்களை இந்தப் படம் சர்வதேச அளவில் குவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

ஓடிடியில் விக்ரம் படம்
தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை வைத்து கமலின் முந்தைய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2001ல் வெளியான ஆளவந்தான் படத்தை அவ்வாறு புதிய தொழில்நுட்பத்துடன் ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆளவந்தான் படம்
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கமல் இரு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்றபோதிலும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக தேசிய விருதை பெற்றது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை சிறப்பாக கையாண்டிருந்தார் கமல்.

3டி -டால்பி தொழில்நுட்பம்
இந்நிலையில் தற்போது கமலின் விக்ரம் படம் கொடுத்துள்ள வெற்றியை தொடர்ந்து ஆளவந்தான் படத்தை மீண்டும் திரையிட தாணு முடிவெடுத்துள்ளார். 3டி மற்றும் டால்பி தொழில்நுட்பத்துடன் இந்தப் படம் விரைவில் ரசிகர்களை சந்திக்க திரையரங்குகளுக்கு வரவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

ரசிகர்கள் ஆர்வம்
ஆளவந்தான் படம் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரசிகர்களிடம் சேர்க்கும் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இந்த முயற்சியை பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











