என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர்: கமல்

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் உடலுக்கு நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Recommended Video

முக்தா சீனிவாசன் இறுதி சடங்கில் சிவகுமார்- வீடியோ

சென்னை: என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர், நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர் என பழம்பெரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் குறித்து நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த, பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் (88), சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

Actor Kamals condolence for Muktha Srinivasan

அந்த வகையில், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் முக்தா சீனிவாசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர். என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர். நாயகன் படத்தை தயாரித்தது அவருக்கும் பெருமை எனக்கும் பெருமை. முழு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார், வருத்தப்பட எதுவுமில்லை. 89 வயது, இன்னும் 11 ஆண்டு இருந்திருந்தால் செஞ்சுரி அடித்திருப்பார். நினைத்திருந்தால் இருந்திருப்பார், போதுமென்று அவரே விடைபெற்றதாக கருதுகிறேன்" என்றார்.

Actor Kamals condolence for Muktha Srinivasan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X