ஜனவரி 22ம் தேதி துவங்கும் இந்தியன் 2 சூட்டிங்.. யாரெல்லாம் ஜாய்ன் ஆகறாங்க தெரியுமா?
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தற்போது இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் கமல்ஹாசன்.
இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய சிறு வயதில் இருந்தே பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர். இவரது நடிப்பில் கவரப்பட்டுள்ள ரசிகர்கள் உலக நாயகன் என்று இவரை கொண்டாடி வருகின்றனர். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளார் கமல்ஹாசன்.

மிரட்டலான வசூலில் விக்ரம் படம்
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் மிரட்டியது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ரசிகனாக அவரை, அவரது சிறப்பை விக்ரம் படத்தில் வெளிக் கொண்டு வந்திருந்தார் லோகேஷ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், சூர்யா என நட்சத்திரப் பட்டாளங்களை சிறப்பாக பயனப்டுத்தியிருந்தார்.

உற்சாகத்தில் கமல்ஹாசன்
இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், படத்தின் வெற்றி கமலை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் அரசியலில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்தடுத்தப் படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமிட்டாகி வருகிறார் கமல்ஹாசன்.

மீண்டும் துவங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் படத்தை தயாரிக்கவுள்ள கமல், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்திலும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கி நடத்தப்பட்ட நிலையில் வரும் 22ம் தேதி படத்தின் சூட்டிங் திருப்பதியில் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக திருப்பதியிலேயே படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், கமலுக்கு ஏராளமான ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர்.

திருப்பதியில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்நிலையில் திருப்பதியில் மீண்டும் படத்தின் சூட்டிங் நாளை மறுநாள் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சித்தார்த் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ராம்சரணின் படத்திற்காக நியூயார்க் சென்றிருந்த இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.


Click it and Unblock the Notifications











