கோலிவுட் படங்களில் தொடர்ந்து வசூல்வேட்டை.. தமிழகத்தில் முதலிடத்தை நோக்கி நகரும் விக்ரம்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 3ம் தேதி ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது விக்ரம் படம்.

Recommended Video

Vikram பட வசூல் சாதனை... கொண்டாட்ட மனநிலையில் KamalHaasan *Kollywood | Filmibeat Tamil

கடந்த விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக அடுத்த விக்ரம் 3 படத்திற்கான லீடாக தற்போது ரிலீசாகியுள்ள விக்ரம் படம் அமைந்துள்ளது.

படத்தில் ஒவ்வொரு சிறிய கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் லோகேஷ். இதற்கு சிறப்பான உதாரணம் ஏஜெண்ட் டீனா.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா மற்றும் நடிகைகள் காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி மற்றும் மகேஷ்வரி உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஏஜெண்ட்கள்

விக்ரம் படத்தின் ஏஜெண்ட்கள்

மேலும் படத்தின் ஏஜெண்ட்களாகவும் முக்கிய நடிகர்கள் காட்டப்பட்டுள்ளனர். இதில் ஏஜெண்ட் டீனா, ஏஜெண்ட் உப்பிலியப்பன் மற்றும் ஏஜெண்ட் விக்ரம் என வித்தியாசமான கேரக்டர்களையும் படத்தில் லோகேஷ் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களில் டீனா, உப்பிலியப்பன் கேரக்டர்கள் சிறிதாக இருந்தாலும் கதையில் ஓட்டத்திற்கு துணையாக இருந்தனர்.

குட்டி விக்ரம் தர்ஷன்

குட்டி விக்ரம் தர்ஷன்

மேலும் குட்டி விக்ரமாக வரும் குழந்தை நட்சத்திரம் தர்ஷனும் தன்னுடைய முகபாவனைகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவர் கோலிவுட்டில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவரது அப்பா, தர்ஷன் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

தொடர் வசூல் வேட்டை

தொடர் வசூல் வேட்டை

இதனிடையே தொடர்ந்து வசூல்வேட்டையில் விக்ரம் படம் ஈடுபட்டுள்ளது. படம் ரிலீசாகி 10 நாட்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் பெற்ற விக்ரம் படம், தற்போது வார நாட்களிலும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் திரையரங்குகளில் 13 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த 13 நாட்களில் 325 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் பெற்றுள்ளது.

மற்ற மாநிலங்களில் சிறப்பான வசூல்

மற்ற மாநிலங்களில் சிறப்பான வசூல்

கேரளா, ஆந்திரா என வசூல்வேட்டை நடத்திவரும் விக்ரம் படம் வெளிநாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர் என தமிழ் படங்களின் முந்தைய ரெக்கார்ட்டுகளை முறியடித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் மட்டும் கடந்த 13 நாட்களில் 130 கோடி ரூபாய் வசூலை முந்தியுள்ளது விக்ரம் படம். தொடர்ந்து பாகுபலி படத்தின் வசூலை முறியடித்து தமிழகத்தில் அதிகமாக வசூலித்த படம் என்ற பெருமையை விக்ரம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

உற்சாகத்தில் கமல்

உற்சாகத்தில் கமல்

இந்த வசூல்வேட்டையால் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகிறார். சமீபத்தில் லோகேஷிற்கு விலையுயர்ந்த காரும் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்திருந்தார் கமல். தொடர்ந்து உதவி இயக்குநர்களுக்கும் உயர்ரக பைக் பரிசளித்திருந்தார். இதையொட்டி பேசிய இசையமைப்பாளர் அனிருத், தனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X