விக்ரம் பட வெற்றி சூட்டோடு இந்தியன் 2வை முடிப்பாரா கமல்? இன்று துவங்கும் சூட்டிங்.. எங்க தெரியுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்துள்ளது.

Recommended Video

Mocobot-டை முதலில் பயன்படுத்தியது யார்? | Vikram | Interval Making Scene

நான்கு ஆண்டுகளாக நடிக்காமல் காத்திருந்த கமலுக்கு இந்தப் படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல் காய் நகர்த்தி வருகிறார்.

அடுத்ததாக கிடப்பில் போடப்பட்டதாக கருதப்பட்ட இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இன்றைய தினம் துவங்கியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் சிறப்பான பல படங்களை தன்னுடைய கேரியரில் கொடுத்துள்ளார். முதல் பான் இந்தியா ஸ்டாராகவும் தன்னுடைய படங்கள் மூலம் அவர் இருந்துள்ளார். அவரது பல படங்கள் பல வருடங்களுக்கு முன்னதாகவும் பல மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

விக்ரம் படம்

விக்ரம் படம்

ஆனால் அவையெல்லாம் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் நடந்தேறிவிட்டது. ஆனால் தற்போது ஒவ்வொரு படமும் பான் இந்தியா படமாகவே உருவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலின் விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இந்தப்படத்தில் முன்னதாக விவேக் கமிட்டாகியிருந்த நிலையில், அவரது மறைவையொட்டி தற்போது அவரது ரோலில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். காஜல் அகர்வால் படத்தில் இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரும் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் முன்னதாகவே சென்னை வந்துவிட்டார்.

இந்தியன் 2 படத்தின் சூட்டிங்

இந்தியன் 2 படத்தின் சூட்டிங்

இதனிடையே இந்தப் படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து கமல் சிறிதும் ஓய்வெடுக்கவில்லை. தொடர்ந்து இந்தியன் படத்தை தூசித் தட்டினார். தவிர்க்க முடியாத காரணங்களால் பாதியில் சூட்டிங் நிறுத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இதில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சென்னை வந்த காஜல்

சென்னை வந்த காஜல்

இந்தப்படத்தில் முன்னதாக விவேக் கமிட்டாகியிருந்தநிலையில், அவரது மறைவையொட்டி தற்போது அவரது ரோலில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். காஜல் அகர்வால் படத்தில் இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரும் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் முன்னதாகவே சென்னை வந்துவிட்டார்.

இந்தியன் 2வில் இணைந்த உதயநிதி

இந்தியன் 2வில் இணைந்த உதயநிதி

இந்தப் படத்தை தற்போது லைகாவுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது படத்தின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் சென்னை எழிலகத்தில் பிரத்யேகமான செட் போடப்பட்டு துவங்கியுள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் சூட்டிங்கில் இணையும் கமல்

செப்டம்பர் முதல் வாரத்தில் சூட்டிங்கில் இணையும் கமல்

படத்தின் சூட்டிங்கில் கமல் செப்டம்பர் முதல்வாரத்தில் குறிப்பாக செப்டம்பர் 5ம் தேதி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக அமெரிக்காவிற்கு சென்ற கமல், சில முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டார். அதன் புகைப்படங்களில் சிலவற்றையும் அவர் இணையதளத்தில் பகிர்ந்திருந்தார்.

ஜூன் 2023 ரிலீஸ்?

ஜூன் 2023 ரிலீஸ்?

படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்வன் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் சூட்டிங் விரைவுப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சூப்பர் ஹிட்டடித்த முதல் பாகம்

சூப்பர் ஹிட்டடித்த முதல் பாகம்

கமலின் விக்ரம் படம் அவருடைய கேரியரில் சிறப்பாக அவருக்கு கைக்கொடுத்துள்ளது. இந்நிலையில், அதே சூட்டோடு சில மாதங்களிலேயே இந்தியன் 2 படத்தை அவர் துவங்கியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 1996ல் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

இந்தியன் தாத்தா ஸ்டில்

இந்தியன் தாத்தா ஸ்டில்

இந்தியன் தாத்தா என்ற அடைமொழியோடு இந்தப் படத்திற்கு பின்பு கமல் வலம்வந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள ஸ்டில்சும் அதே அளவு மாசை கொடுத்துள்ளது. அதே அளவு வெற்றியையும் கொடுக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X