உலகநாயகனை இயக்கும் வெற்றிமாறன்... பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதாக தகவல்
சென்னை : உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.
இதனிடையே, கமல்ஹாசன் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதாபாத்திரங்கள்
உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய சிறுவயதிலிருந்தே திரைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். ஏராளமான கமர்ஷியல் படங்கள் மட்டுமின்றி ரசிகர்களின் நெஞ்சை அள்ளும் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து மனதை கவர்ந்துள்ளார்.

சூட்டிங்கில் இணையும் கமல்
தேர்தல் காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக அவர் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

பேச்சுவார்த்தைகள் நிறைவு
இந்நிலையில் பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்துள்ள இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் எதிர்பார்ப்பு
இந்த படத்தை தயாரிப்பதற்காக சில தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கூட்டணி கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள அசுரன் படத்தையடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிசியான வெற்றிமாறன்
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே சூர்யாவின் வாடிவாசல் மற்றும் தனுஷின் படம் என அடுத்தடுத்து அவர் கமிட் ஆகியுள்ளார். விஜய் படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











