twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேவி ஆனந்த் மறைவு… சினிமாவிற்கு பேரிழப்பு… கமல்ஹாசன் இரங்கல் !

    |

    சென்னை : பிரபல தமிழ் இயக்குனரும், பிரபல ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கேவி ஆனந்தின் இறப்பு சினிமாதுறைக்கு பேரிழப்பு என கமல் கூறியுள்ளார்.

    இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா!இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா!

    அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரின் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.

    இயக்குனராக அறிமுகம்

    இயக்குனராக அறிமுகம்

    ஒளிப்பதிவாளரான கேவி ஆனந்த் கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து, கோ, அயன், மாற்றான், அனேகன், கவண் , காப்பான், என பலத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தமிழ் பத்திரிக்கைத்துறையில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    கடந்த 1995ஆம் ஆண்டு தேன்மாவின் கொம்பத்து என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் கேவி ஆனந்த் பெற்றார். இவர் கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராகி அதன் பிறகு அயன், கோ, கவண், காப்பான், மாற்றான், அநேகன் எனப் பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக கடந்த 24ந் தேதி உடல் சோர்வும் , தொண்டையில் வலியும் இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

    சினிமாவிற்கு பேரிழப்பு

    இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

    Read more about: ட்விட்டர்
    English summary
    Actor Kamalhaasan mourns KV Anand death
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X