எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன்.. கமல் தடாலடி!

எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை: எம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் படம் விஸ்வரூபம் 2. விஸ்வரூபம் படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபம் இரண்டாம்பாகத்தை எடுத்துள்ளார் கமல்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் கமல் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அதெல்லாம் பொய்

அதெல்லாம் பொய்

அவர் பேசியதாவது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய். என் தொழில், சினிமா.

தொடர்ந்து நடிப்பேன்

தொடர்ந்து நடிப்பேன்

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்னால் இயலாது என்று தெரியும்போது, நடிப்பதை விட்டு விடுவேன்.

என்னிடம் பணம் இருக்கிறது

என்னிடம் பணம் இருக்கிறது

சினிமா என் தொழில். அதில், நான் வசதியாக இருக்கிறேன். இவரிடம் பணம் இருக்கிறது. ஊழல் பண்ண மாட்டார் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

நடிகர் சங்கத்துக்கு பாராட்டு

நடிகர் சங்கத்துக்கு பாராட்டு

எஞ்சிய வாழ்க்கையில்தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன். நடிகர் சங்கத்தில், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிற மாதிரி பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்கள்.

நிறைய பெண்கள் இருக்கிறார்கள்

நிறைய பெண்கள் இருக்கிறார்கள்

அவர்களே தொடர்ந்து பதவியில் நீடிப்பதில், எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. என் வாழ்க்கையில் தாயாக, தங்கையாக, மகளாக நிறைய பெண்கள் இருக்கிறார்கள். என் மகள் சுருதிஹாசனின் எதிர்காலத்தை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்." இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X