சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன உலக நாயகன்.. ரைவலாகும் டிவிட்!#HBDSuperstarRajinikanth
சென்னை: நடிகர் ரஜினிக்காந்துக்கு உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் இரு துருவங்களாக இருந்தபோதும் நடிக்க வந்த காலம் முதல் தற்போது வரை இருவரும் நல்ல நட்பை பாராட்டி வருகின்றனர்.
அண்மையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அவரது திரைத்துறை ஆசானான இயக்குநர் பாலச்சந்தருக்கு சிலை திறந்தார்.

உங்கள் நான்
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அதேபோல் கமலின் 60ஆண்டு கால சினிமா வாழ்க்கை மற்றும் 65வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ரஜினி.

நட்பு என்றும் மாறாது
அப்போது நள்ளிரவை தாண்டியும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, தங்களின் நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை விளக்கினார். கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் மாறினாலும் எங்களின் நட்பு என்றும் மாறாது என்று தெளிவாக கூறினார்.
கமல் வாழ்த்து
இந்நிலையில் இன்று ரஜினியின் 70வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டிவிட்டரில் தனது நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

அன்பர் ரஜினிகாந்த்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அன்பர் நண்பர் திரு. ரஜினிகாந்துக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான். என தெரிவித்து இருக்கிறார். கமலின் இந்த டிவிட் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











