Kamal birthday: அடுத்தடுத்த போஸ்டர்கள்.. இந்தியன் தாத்தாவின் கெத்தை வெளிப்படுத்திய இந்தியன் 2 டீம்!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர். அவர் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கமல்ஹாசனின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்ட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி மாஸ் காட்டியது.

Actor Kamals Indian 2 movie new poster released to celebrate his birthday

கமல் பிறந்தநாள்: நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர். அவர் இன்று தன்னுடைய 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆயினும் என்றும் மார்க்கண்டேயன் என்றும் வார்த்தைகளுக்கு இணங்க அவர் துடிப்புடன் காணப்படுவது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி வருகிறது. தனது 4 வயதில் தன்னுடைய திரைப்பயணத்தை அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடி துவங்கினார் கமல்.

69 வயதிலும் மாஸ்
: தற்போது 69வது வயதிலும் தான் கேங்ஸ்டராகவும் இந்தியன் தாத்தாவாகவும் ராணுவ வீரனாகவும் பல்வேறு கேரக்டர்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். அவரை இப்படி வித்தியாசமாக பார்ப்பதில்தான் அவரது ரசிகர்களுக்கு விருப்பம். சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள பிரதீப் கூட தற்போது கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் என்றால் அவரது நடிப்பை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

உலகநாயகன் பிறந்தநாள்: உலகநாயகனாக கொண்டாடப்படும் கமலின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் அதிரிபுதிரி வெற்றியை கொடுத்துள்ள நிலையில், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமல் மிகப்பெரிய மகிழ்ச்சியை பெற்றுள்ளார். அந்த மகிழ்ச்சி அவரது அடுத்தடுத்த படங்களில் வெளிப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகளாக தூங்கிக்கிடந்த இந்தியன் 2 படத்தை தூசித்தட்டி எடுத்ததே தற்போது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது படம்.

இந்தியன் 2 அறிமுக வீடியோ: இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மனோடாலா, விவேக் என நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதனிடையே இன்றைய தினம் கமலின் பிறந்தநாளையொட்டி சில தினங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் காஜல் அகர்வால் மிஸ்ஸிங். அதனால் அவரது கேரக்டர் படத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் 2 புதிய போஸ்டர்: இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் தட்டி சென்றுள்ள நிலையில், தற்போது இன்றைய தினம் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லியுள்ள இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா, இந்தப்படத்தில் கமலின் கேரக்டர் பெயரிலேயே இந்த வாழ்த்தை பகிர்ந்துள்ளது. வீரசேகரன் சேனாபதி கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இந்தப் படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X