Actor Vijay: அடுத்தடுத்த நடிகர்களை களமிறக்கும் தளபதி 68.. படத்தில் புதிதாக ஜாய்ன் ஆன நடிகர்!
சென்னை: நpடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னை, தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்து முடிந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சில தினங்கள் பிரேக் விட்டுள்ள படக்குழுவினர் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கை துவங்கவுள்ளனர். படத்தில் விஜய், அப்பா -மகன் என்ற இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், மகன் கேரக்டருக்காக விஜய்க்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அவரை நவீன தொழில்நுட்பத்தில் இளமையாக காட்டும் நடவடிக்கையும் படத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரசிகர்களை இந்தப் படம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அப்பா விஜய் கேரக்டருக்கு சினேகாவும் மகன் விஜய் கேரக்டருக்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக படத்திலிருந்து சிறிய கேப் எடுத்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளார். டைம் டிராவலை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே புத்தாண்டையொட்டி படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
தளபதி 68ன் டைட்டில்: விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் வெளியான நிலையில், படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இந்நிலையில் தளபதி 68 படம் ரசிகர்களுக்கு எத்தகைய அனுபவத்தை கொடுக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. படத்திற்கு G.O.A.T என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இன்னும் சில தினங்களில் ரசிகர்களுக்கு தெரியவரும். அதற்காக அவர்கள் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். விஜய்க்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படும் நிலையில், அவரது படங்கள் அனைத்துமே கொண்டாட்டத்திற்குரியவையாக அமைந்து வருகின்றன.
நட்சத்திர பட்டாளம்: படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர கூட்டணி இணைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நடிகர்கள் படத்தில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக படத்தில் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது படத்தில் கிச்சா சுதீப் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அமீர் குறித்த விஷயத்தில் கஞ்சா கருப்பு பேசியுள்ள நிலையில் அவர் தளபதி 68 படததில் இணைந்துள்ளார்.
ஹாலிவுட் படத்தின் காப்பி?: தளபதி 68 படம் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் படத்தின் காப்பி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து படக்குழு சார்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது ஐதராபாத் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள படக்குழு அடுத்ததாக வரும் ஜனவரி 3ம் தேதி முதல் அடுத்தக்கட்ட சூட்டிங்கை சென்னையில் நடத்தவுள்ளனர். டைம் டிராவல் பட ஜானரில் படம் உருவாகிவருவதாக கூறப்படும் நிலையில், படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சமூக வலைதளங்களில் நகைப்பிற்கு உள்ளாகியுள்ளது. GOAT என்பது Greatest of all time என்பதை குறிப்பதாக இருந்தாலும் கோட் என்றால் ஆடு என்று பொருள்படுவதால் இந்த தலைப்பு தற்போது ட்ரோல்களுக்கு உள்ளாகிவருகிறது.


Click it and Unblock the Notifications











