twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருடத்திற்கு 10 ‘நல்ல’ படங்கள்... ’சோலையம்மா’ வில்லனின் புதிய திட்டம்!

    நடிகராக அறிமுகமாகி தயாரிப்பாளராக மாறியுள்ள வில்லன் நடிகர் கரிகாலன், வருடத்திற்கு பத்து படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

    |

    சென்னை: வருடத்திற்கு பத்து படங்கள் வீதம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்.

    அதில் ரமணா, அரவான், அடிமைசங்கிலி, நிலாவே வா, கருப்பி ரோஜா, தயா, தேவன் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் "வைரவன் "

    ரியல் எஸ்டேட் பிசினஸ்:

    ரியல் எஸ்டேட் பிசினஸ்:

    சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்த கரிகாலன், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது சினிமாவுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

    தயாரிப்பு நிறுவனம்:

    தயாரிப்பு நிறுவனம்:

    காமராஜர் மீது கொண்ட மரியாதையின் காரணமாக, 'காமராஜர் கனவுக் கூடம்' என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் கரிகாலன். தனது பட நிறுவனத்தின் மூலம் நல்ல தரமான, சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் படங்களை தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    10 படங்கள்:

    10 படங்கள்:

    இதுபற்றி அவர் கூறியதாவது, "சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக, கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்.

    நல்ல எண்ணம்:

    நல்ல எண்ணம்:

    எங்களால் எல்லாரையும் திருத்த முடியாது. ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு" என்கிறார் நடிகர் கரிகாலன்.

    English summary
    The Villain actor Karikalan has started a new production house in the name of Kamarajar kalai koodam and decides to produce ten films per year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X