இருட்டில் நடித்த கார்த்தி.. கைதியில் புது டெக்னிக்!

சென்னை: நடிகர் கார்த்தியின் அடுத்த படமான கைதி திரைப்படம், தமிழ் சினிமாவில் முதன் முறையாக இரவில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி தற்போது, ஜீது ஜோசப் இயக்கத்தில் தனது அண்ணி ஜோதிகாவுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Actor Karthi acts in a new movie called Kaithi

மாநகரம் திரைப்படத்தில் பரபரப்பான திரைக்கதை மூலம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி படத்தில் கார்த்திக்காக வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். கைதி படம் முழுக்க முழுக்க இரவில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியே கிடையாதாம். படத்தின் மொத்த படப்பிடிப்பும் 62 இரவுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

வாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா?

தளபதி 64 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என தகவல்கள் வெளியான நிலையில் வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்குவதால், லோகேஷ்க்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில் ஆச்சர்யம் இல்லை.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தேவ் படத்தில் சற்று சறுக்கிய கார்த்தி, கைதியை தேர்வு செய்தது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X