விருமன் பட கொண்டாட்டம்.. அடுத்தடுத்து ட்வீட் செய்த சூர்யா -கார்த்தி!
சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் சூப்பர் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் விருமன்.
இந்தப் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 475 திரையரங்குகளில் படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்தை முத்தையா இயக்கியுள்ள நிலையில், படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விருமன் படம்
நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், ஆர்கே சுரேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விருமன் படம். இந்தப் படத்தின்மூலம் கார்த்தி -முத்தையா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

வரவேற்பை பெற்ற கொம்பன்
முன்னதாக இவர்களின் கொம்பன் படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில், தற்போது இவர்கள் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சூர்யா தயாரிப்பு
இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணனும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான சூர்யா, தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் பிரமோஷன் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.

பாடகியாகவும் மாறிய அதீதி
படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர், ஸ்னீக் பீக் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக தன்னுடைய முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளார் அதீதி ஷங்கர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் மதுர வீரன் பாடலை அதீதி பாடியுள்ளார்.

முழுமையான குடும்ப என்டர்டெயின்மெண்ட்
இன்றைய தினம் படம் ரிலீசாகியுள்ள நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விருமன் படம் முழுமையான குடும்ப என்டர்டெயின்மெண்ட் படம் என்று கூறியுள்ளார். இந்தப் படம் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதீதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சூர்யா, ரசிகர்களின் அன்பு என்றென்றைக்கும் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள்
இதனிடையே படத்தின் ரிலீசையொட்டி கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில் விருமனை உங்கள் வீடுகளை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புவதாகவும் இன்று முதல் திரையரங்குகளில் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விருமன் படத்தின் போஸ்டரையும் அவர் இணைத்துள்ளார்.

இயக்குநராகும் கார்த்தி?
நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அண்ணனுக்காக கதை எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். இவர் இயக்குநராகும் கனவுடன் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ஆனால் பருத்தி வீரன் மூலம் நடிகராக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











