குட்டி கவுனுடன் கார்த்தியுடன் கபடி விளையாடிய அதீதி.. யார் முன்னாடி தெரியுமா?
சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது விருமன் படம்.
Recommended Video
இந்தப் படத்தின்மூலம் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி.
இந்தப் படம் ரசிகர்களை சிறப்பான வகையில் கவர்ந்து, அதிக வசூலையும் குவித்து வருகிறது. தொடர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக வெற்றிகரமாக ஒடி வருகிறது.

விருமன் படம்
நடிகர் கார்த்தி, சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், அதீதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகிறது விருமன் படம். இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார்.

சிறப்பான வசூல்
கடந்த ஒரு வாரத்திலேயே இந்தப் படத்தின் வசூல் சிறப்பாக காணப்படுகிறது. கடந்த 6 நாட்களில் சென்னையில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 1.8 கோடி ரூபாய்களை கடந்துள்ளது. இந்த வசூல் வேட்டை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம் இன்றைய தினம் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

விருமன் சக்சஸ் மீட்
இதனிடையே விருமன் படத்தி சக்சஸ் மீட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற கார்த்தி மற்றும் சூர்யா கலக்கலாக வந்து அனைவரையும் கவர்ந்தனர். முக்கியமாக இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கருப்பு நிற குட்டை கவுனில் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்த அதீதி ஷங்கர்.

மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கிய அதீதி
படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்து அனைவரையும் கவர்ந்த அதீதி, வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் பக்கா மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்தது சிறப்பாக அமைந்தது. விழாவிற்கு வந்த அனைவரது கவனமும் அவர்மீதுதான் இருந்தது. இந்த விழாவில் படக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கபடிப் போட்டி
தொடர்ந்து உணவுடன் சில விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் அனைவரையும் கவர்ந்தது கபடிப் போட்டிதான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகர் கார்த்தியும் அதீதியும்கூட இந்த கபடிப் போட்டியில் கலந்துக் கொண்டனர். இருவரும் எதிரெதிரே நின்றுக் கொண்டு மல்லுக்கட்டியது பார்ப்பவர்களை சிறப்பாக உணர செய்தது.

குட்டை கவுனில் கபடிப் போட்டி
இந்தக் கபடிப் போட்டியை நடிகர் சூர்யாவும் மிகவும் ரசித்து பார்த்தார். தன்னுடைய அண்ணன் முன்பு எப்போதுமே மரியாதையுடன் நடந்துக் கொள்ளும் கார்த்தி, எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் குட்டை கவுனுடன் வந்திருந்த அதீதியுடன் இந்தப் போட்டியில் கலந்துக் கொண்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.


Click it and Unblock the Notifications











